வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மூத்த தொழில் வல்லுநர்கள் புது யுக தொழில் முனைவோரின் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும்: திரு பியுஷ் கோயல்
Posted On:
03 SEP 2020 2:35PM by PIB Chennai
சர்வதேச விநியோக சங்கிலிகளுக்கு பெரிய அளவில் பங்காற்ற இந்தியாவை தயார்படுத்துவதற்கு புது யுக சிந்தனைகள் உதவும் என்று மத்திய வர்த்தகம் & தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) 'இந்தியாவின் வருங்கால தொழில் குழுவின் தொடக்கம்' என்னும் நிகழ்ச்சியில் பேசிய அவர், புது யுக தொழில்முனைவோர் இந்தியாவின் விதியை மாற்றியமைத்து அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள் என்றார்.
"புது யுக தொழில்களை இந்தியாவில் ஊக்குவிப்பதற்கு ஒத்த கருத்துடைய நாடுகளுடன் தளம் ஒன்றை நாம் அமைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.புது யுக தொழில்களை ஊக்கப்படுத்த இதர நாடுகளுடன் இணைந்து நம்பகத்தகுந்த பங்குதாரர்களைக் கொண்ட தளத்தை இந்தியா கட்டமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
மூத்த தொழில் வல்லுநர்கள் புது யுக தொழில் முனைவோரின் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று திரு பியுஷ் கோயல் கேட்டுக்கொண்டார். சர்வதேச புதுமைகள் குறியீட்டில் 52-ஆம் இடத்தில் இருந்து 48-ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650967
-----
(Release ID: 1650987)
Visitor Counter : 254