சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகத்திலேயே மிகவும் குறைவான கொரோனா இறப்பு விகிதங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியாவின் 1.76% இன்னும் குறைந்து வருகிறது

Posted On: 02 SEP 2020 12:35PM by PIB Chennai

பல்வேறு இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது, கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. உயிரிழப்போரின் விகிதம் உலகளவில் 3.3 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 1.76 சதவீதமக உள்ளது.

 

பத்து லட்சம் நபர்களில் உயரிழப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் மிகவும் குறைவாகும். பத்து லட்சம் மக்களில் உயிரிழப்போரின் சர்வதேச சராசரி 110 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 48 ஆக உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது பிரேசிலில் 12 மடங்கும், இங்கிலாந்தில் 13 மடங்கும் அதிகமாக உள்ளது.

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகளின் சிறப்பான மருத்துவ மேலாண்மைக்காக, அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளின் (FAQs) பட்டியலையும், அதற்கான விடைகளையும் எய்ம்ஸ், புது தில்லியுடன் இணைந்து சுகாதர அமைச்சகம் தயாரித்துள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இவற்றை https://www.mohfw.gov.in/pdf/AIIMSeICUsFAQs01SEP.pdf என்னும் முகவரியில் காணலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1650585&RegID=3&LID=1

 

****


(Release ID: 1650609) Visitor Counter : 235