ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மத்திய உரத்துறை செப்டம்பர் 1 முதல் 15 வரை தூய்மை இருவாரம் கடைபிடிப்பு

Posted On: 01 SEP 2020 2:57PM by PIB Chennai

மத்திய உரத்துறை 2020 செப்டம்பர் 1 முதல் 15-ந் தேதி வரை தூய்மை இருவாரமாக கடைபிடிக்க உள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் அனைத்தும் தூய்மை பாரதம் திட்டத்தில் பெரிய அளவு பங்கேற்க உள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தூய்மை இயக்கப் பணிகளை மேற்கொள்வது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது என்று மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா, பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1650597) Visitor Counter : 128