பிரதமர் அலுவலகம்

அமெரிக்க - இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாட்டில் பிரதமர் நாளை சிறப்புரை ஆற்றுகிறார்

Posted On: 02 SEP 2020 10:57AM by PIB Chennai

அமெரிக்க-இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி 3 செப்டம்பர், 2020 அன்று இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் சிறப்புரை ஆற்றுகிறார்

 

அமெரிக்க-இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பு என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்காக பணியாற்றும் லாப நோக்கில்லா அமைப்பாகும்.

 

31 ஆகஸ்ட் அன்று தொடங்கிய ஐந்து நாள் கூட்டத்தின் மையப்பொருள் 'புதிய சவால்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா-இந்தியா' ஆகும்.

 

சர்வதேச உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் சாத்தியக்கூறுகள், இந்திய எரிவாயு சந்தையின் வாய்ப்புகள், இந்தியாவுக்கு அயல்நாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக வணிக செயல்முறைகளை எளிதாக்குதல், தொழில்நுட்பத் துறையில் பொது வாய்ப்புகள் மற்றும் சவால்கள், இந்திய பசிபிக் பொருளாதார பிரச்சனைகள், பொது சுகாதாரத்தில் புதுமைகள் மற்றும் பல் தலைப்புகளை இந்த மையப்பொருள் உள்ளடக்குகிறது.

 

இந்த மெய்நிகர் கூட்டத்தில் மத்திய அமைச்சகர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

                                                                                                     ***
 

 


(Release ID: 1650587) Visitor Counter : 245