தேர்தல் ஆணையம்

புதிய தேர்தல் ஆணையராக திரு. ராஜிவ் குமார் பொறுப்பேற்றார்

Posted On: 01 SEP 2020 12:40PM by PIB Chennai

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக திரு. ராஜிவ் குமார் இன்று பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா ஆகியோருடன் இந்திய தேர்தல் ஆணையத்தில் திரு குமார் இணைந்தார்.

 

19 பிப்ரவரி, 1960 அன்று பிறந்த திரு ராஜிவ் குமார், 1984-ஆம் ஆண்டை சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 36 ஆண்டுகளுக்கும் அதிகமான இந்திய அரசுப் பணியில், மத்தியிலும், தனது மாநிலப் பிரிவான பீகார்/ஜார்கண்டிலும் பல்வேறு அமைச்சகங்களில் திரு குமார் பணிபுரிந்துள்ளார்.

 

தொழில்நுட்பத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவரான திரு. குமார், அதன் மூலம் வெளிப்படைத்தன்மையையும், மக்களுக்கு சிறந்த சேவைகளை அளிப்பதையும் லட்சியமாகக் கொண்டவர் ஆவார்.

 

மலையேற்றத்திலும், இந்தியப் பாரம்பரிய மற்றும் ஆன்மிக இசையிலும் திரு. ராஜிவ் குமார் ஆர்வம் கொண்டவர்.

 

***


(Release ID: 1650369) Visitor Counter : 3044