சுற்றுலா அமைச்சகம்
பாருங்கள் நமது தேசத்தை என்ற இணையவழிக் கருத்தரங்கு தொடரில், “ஹம்பி கடந்த காலத்திலிருந்து உற்சாகம் - எதிர் காலத்திற்குச் செல்வோம்” என்ற தலைப்பில், மத்திய சுற்றுலா அமைச்சகம் இணையவழிக் கருத்தரங்கு நடத்தியது
Posted On:
31 AUG 2020 1:59PM by PIB Chennai
பாருங்கள் நமது தேசத்தை என்ற இணையவழிக் கருத்தரங்குத் தொடரின் ஒரு பகுதியாக, 29 ஆகஸ்ட் 2020 அன்று “ஹம்பி: கடந்த காலத்திலிருந்து உற்சாகம் - எதிர்காலத்திற்குச் செல்வோம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. பாரம்பரியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் சமூகப் பொருளாதாரச் சுற்றுச்சூழல் அம்சங்கள் குறித்தும், ஹம்பிக்கு தேவையான விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த அணுகுமுறை எடுப்பதில் இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்தியது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகச்சிறந்த பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டுவதற்காக இந்த இணைய வழிக் கருத்தரங்கு தொடர் நடைபெற்று வருகிறது.
இந்து சாம்ராஜ்யமான விஜயநகரத்தின் கடைசிட் தலைநகரமான ஹம்பியின் பெருமை குறித்து கிஷ்கிந்தா டிரஸ்ட் நிறுவனர் திருமிகு. ஷாமா பவார், இன்டாக் அனேகுண்டி ஹம்பி ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார். ஹம்பி, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமாகும். பொங்கிப் பெருகும் துங்கபத்ரா நதி,, அழகிய மலைத்தொடர்கள் திறந்த சமவெளிகள் போன்றவை ஒருங்கே கொண்ட எழில்மிகு தலமாகும் ஹம்பி. பழங்காலக் கோட்டைகள் நதிப்புறத்துக் அம்சங்கள், அரண்மனைகள் மாளிகைகள், புனித வளாகங்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், பெரும் தூண்கள் கொண்ட கூடங்கள், மண்டபங்கள், நினைவு அமைப்புகள், வாயில்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள், குதிரை லாயங்கள், நீர்நிலைகள் என ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பல்வேறு பண்டைக்கால அமைப்புகள் உள்ளன என்பதிலிருந்து ஹம்பி எவ்வளவு நாகரிகமாகவும், அரசுத் தன்மை வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும், நகரமயமாகவும் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த இணைய வழிக் கருத்தரங்கின் தொடர்களை இங்கே காணலாம்.
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் காணலாம்.
-------
(Release ID: 1650268)
Visitor Counter : 207