பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியத் தயாரிப்புகளுக்கு ஆதரவு என்ற கொள்கைக்கு மேலும் ஊக்கமளிக்க இந்திய ராணுவத்திற்கு பினாகா ரெஜிமென்ட்களை வழங்குவதற்காக இந்திய நிறுவனங்களுடன் ரூ.2580 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கையெழுத்திட்டது

Posted On: 31 AUG 2020 6:08PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் இந்திய அரசின் ‘இந்தியத் தயாரிப்புகளுக்கு ஆதரவு’ முயற்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கையகப்படுத்தல் பிரிவு (MoD) இன்று M/s பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), M/s டாடா பவர் கம்பெனி லிமிடெட் (TPCL) மற்றும் M/s லார்சன் அண்ட் டர்போ (L & T) ஆகிய நிறுவனங்களுடன் இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைக்கு ஆறு பினாகா ரெஜிமென்ட்களை வழங்குவதற்காக தோராயமாக ரூ.2580 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆறு பினாகா ரெஜிமென்ட்களில் 114 லாஞ்சர்ஸ் கொண்ட தானாகக் குறி பார்த்துச் சுடும் துப்பாக்கி மற்றும் நிலைப்படுத்தல் அமைப்பு (AGAPS) மற்றும் 45 கட்டளை இடுகைகள்  M/S டாடா பவர் கம்பெனி லிமிடெட் (TPCL) மற்றும் M/s லார்சன் அண்ட் டர்போ (L & T) மற்றும் 330 வாகனங்கள் M/s பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட வேண்டும். இந்த ஆறு பினாகா ரெஜிமென்ட்கள் நம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் செயல்படும், இது நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயாரிப்பை மேலும் மேம்படுத்துகிறது. ஆறு பினாக்கா ரெஜிமென்ட்களின் தொகுப்பு 2024க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

70 சதவீதம் உள்நாட்டு உள்ளடக்கத்துடன் வாங்க (இந்திய) வகைப்படுத்தலின் கீழ் உள்ள இந்தத் திட்டத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

பினாகா மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம் (MLRS) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கியுள்ளதுடன், மேற்கூறிய பாதுகாப்புத் துறைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய அரசின் (DRDO & MoD) உதவியுடன் பொது தனியார் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் ஒரு முதன்மைத் திட்டமாகும், இது பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் “சுயசார்பு பாரதம்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

 

*****



(Release ID: 1650160) Visitor Counter : 233