பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக, எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்தமான் & நிகோபார் நிர்வாகம் அறிவுறுத்தல்

Posted On: 29 AUG 2020 7:08PM by PIB Chennai

அந்தமானில் வசிக்கும் பழங்குடியினர், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினரைப் (PVTGs) பாதுகாப்பதில் விழிப்புடன் இருந்து வருவதாக, அந்தமான் & நிகோபார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அந்தமான் & நிகோபார் தீவுகள் நிர்வாகம், மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,  அந்தமான் தீவில் கோவிட்-19 பாதிப்பு ஏதும்  தென்படுவதற்கு முன்பாக, 2020 மார்ச் மத்தியிலிருந்தே,  பழங்குடியினரைப் பாதுகாக்க,  ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.  அந்தமான் & நிகோபார் தீவுகளில், ஆறு பழங்குடியினக் குழுக்கள் உள்ளன.   நிகோபார்வாசிகள் தவிர, எஞ்சிய 05 பழங்குடியினரான,  கிரேட் அந்தமான்வாசிகள், ஜாரவா, சென்டினெல்வாசிகள்,   ஓங்கே மற்றும் ஷாம்பென் ஆகிய குழுவினர், அங்கீகரிக்கப்பட்ட எளிதில் இலக்காகக் கூடிய பழங்குடியினக் குழுவினர் ஆவர்.  

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முன்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினரைப் பாதுகாக்க,  குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினரைப் பாதுகாக்க, அந்தமான் & நிகோபார் நிர்வாகம்   விழிப்புடன் இருந்து வருவதுடன், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறையும்,   அந்தமான் & நிகோபார் நிர்வாகத்துடன், தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.   மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முன்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினரைப் பாதுகாக்க,  குறிப்பாக எளிதில் இலக்காகக் கூடிய பழங்குடியினக் குழுவினரைப் பாதுகாக்க, அந்தமான் & நிகோபார் நிர்வாகம்   விழிப்புடன் இருந்து வருவதுடன், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையும்,   அந்தமான் & நிகோபார் நிர்வாகத்துடன், தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

                                                                                                 *******



(Release ID: 1649757) Visitor Counter : 159