தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

புதிய பீகார் விதான் மண்டலுக்கு சேவை அளிக்க அடுத்த தலைமுறை வலையமைப்புத் தொலைபேசித் தொடர்பகத்தை பீகார் பெற்றது

Posted On: 29 AUG 2020 4:13PM by PIB Chennai

அகண்ட அலைவரிசை இணையச் சேவைகளை அனைவருக்கும் வழங்கும் இந்திய அரசின் லட்சியத்தை பூர்த்தி செய்வதில் ஒரு பெரிய அடியை பி எஸ் என் எல் எடுத்து வைத்துள்ளது. பீகாரின் புதிய விதான் மண்டல் வளாகத்தில் அடுத்த தலைமுறை வலையமைப்பு தொலைபேசி தொடர்பகத்தையும். பீகாரில் உள்ள தனாப்பூர் தொலைபேசி தொடர்பகத்தில் பாராத் ஏர் பைபர் சேவையையும் தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதி அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் புது தில்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் 29 ஆகஸ்ட் அன்று தொடங்கி வைத்தார். பீகார் துணை முதல்வர் திரு. சுஷில் குமார் மோடி, பீகார் சட்ட மேலவைத் தலைவர் திரு. அவதேஷ் நாராயண் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் பீகார் விதான் மண்டலில் உள்ள அடுத்த தலைமுறை வலையமைப்புத் தொலைபேசித் தொடர்பகம் நம்பகத்தகுந்த வட இணைப்பு மற்றும் அகண்ட அலைவரிசைச் சேவைகளுக்கான கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும். 512 தொலைபேசி இணைப்புகள் மற்றும் 128 அகண்ட அலைவரிசை இணைப்புகளுக்கான திறனை உள்ள இந்தத் தொடர்பகத்தின் திறனை இன்னும் அதிகப்படுத்த முடியும். புதிய மற்றும் பழைய சட்டசபை வளாகங்கள் மற்றும் புதிய தலைமைச் செயலகத்தின் ஏ, பி மற்றும் சி அலகுகளுக்கு இந்த வசதியின் மூலம் சேவை வழங்கப்படும்.

 

மாதத்துக்கு ரூ 349 என்னும் குறைந்த கட்டணத்தில் பாராத் ஏர் பைபரின் சந்தாத் திட்டங்கள் தொடங்கும். கிராமங்கள் மற்றும் கடினமான இடங்களுக்கு இணைய வசதியைக் கட்டுபடியாகக்கூடிய கட்டணத்தில் இது வழங்கும்.

 



(Release ID: 1649569) Visitor Counter : 146