உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தேசிய விளையாட்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


"தேசிய விளையாட்டு தினத்தன்று, அவர்களின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்திய நமது விளையாட்டு வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்"
"விளையாடு இந்தியா மற்றும் ஆரோக்கிய இந்தியா” (Khelo India Fit India போன்ற ஊக்குவித்தல் மூலம் இளம் திறமை முயற்சிகளை வளர்ப்பதில் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டு விளையாட்டை மேம்படுத்துவதில் ஒரு கருவியாகப் பங்கு வகிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ஹாக்கி வழிகாட்டியான மேஜர் தியான் சந்த் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
"ஒரு தனித்துவமான தலைவராக, அவர் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றார் மற்றும் அவரது அற்புத விளையாட்டு நுட்பத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களை மயக்கினார்"
"அவரது திறமை, சாதனைகள் மற்றும் தாய்நாட்டின் மீதான பக்தி ஆகியவை தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கின்றன

Posted On: 29 AUG 2020 3:28PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தேசிய விளையாட்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திரு. அமித்ஷா தனது சுட்டுரையில், "தேசிய விளையாட்டு தினத்தன்று, அவர்களின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்திய நமது விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்" "விளையாடு இந்தியா மற்றும் ஆரோக்கிய இந்தியா” (Khelo India Fit India போன்ற ஊக்குவித்தல் மூலம் இளம் திறமை முயற்சிகளை வளர்ப்பதில் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டு விளையாட்டை மேம்படுத்துவதில் ஒரு கருவியாக பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் ஹாக்கி வழிகாட்டியான மேஜர் தியான் சந்த் ஜெயந்திக்கு அவரது பிறந்த நாளான இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது "ஒரு தனித்துவமான தலைவராக, அவர் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றார் மற்றும் அவரது அற்புத விளையாட்டு நுட்பத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களை மயக்கியதாகத் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், "அவரது திறமை, சாதனைகள் மற்றும் தாய்நாட்டின் மீதான பக்தி ஆகியவை தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். மேஜர் தியான் சந்த் ஆகஸ்ட் 29, 1905 அன்று பிறந்தார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

"தேசிய விளையாட்டு தினத்தன்று #NationalSportsDay, அவர்களின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்திய நமது விளையாட்டு வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்"

"விளையாடு இந்தியா மற்றும் ஆரோக்கிய இந்தியா” (Khelo India Fit India) போன்ற ஊக்குவித்தல் மூலம் இளம் திறமை முயற்சிகளை வளர்ப்பதில் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டு விளையாட்டை மேம்படுத்துவதில் ஒரு கருவியாக பங்கு வகிக்கிறது. pic.twitter.com/AwRHmoTMFI

— திரு அமித் ஷா (@AmitShah) August 29, 2020

ஹாக்கி வழிகாட்டியான மேஜர் தியான் சந்த் ஜெயந்திக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி

"ஒரு தனித்துவமான தலைவராக, அவர் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றார் மற்றும் அவரது அற்புத விளையாட்டு நுட்பத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களை மயக்கினார்" "அவரது திறமை, சாதனைகள் மற்றும் தாய்நாட்டின் மீதான பக்தி ஆகியவை தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கின்றன. pic.twitter.com/PLt1GgHCjs

— திரு. அமித்ஷா  (@AmitShah) August 29, 2020


*****


(Release ID: 1649554) Visitor Counter : 155