சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது


குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது

Posted On: 29 AUG 2020 4:10PM by PIB Chennai

இந்தியாவின் கோவிட்-19 மேலாண்மையின் குறிப்பிடத்தக்க அம்சம் காரணமாக குணமடையும் நோயாளிகள் விகிதம் உயர்ந்து வருகிறது. அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்து, மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்புவதுடன், வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தும் (லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்கள்) விடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும், தேசிய நிலை சிகிச்சை விதிமுறையைப் பின்பற்றுவதாலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களை முறையான தினசரிக் கண்காணிப்பாலும் குணமடைதல் விகிதம் குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று 26 லட்சத்தை கடந்தது. தீவிர பரிசோதனை, விரிவான பாதிப்புக் கண்டறிதல், செயல்திறன் மிக்க தீவிர சிகிச்சை, மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தும் இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு என்ற முழுமையான கொள்கை உத்திகளைப் பின்பற்றுவதால் , 2, 648,998 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 65,050 பேர் குணமடைந்துள்ளனர். அதிக இறப்பு விகிதம் காணப்படும் மாநிலங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் திறமைமிக்க மருத்துவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் மருத்துவ சிகிச்சைத் திறன் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தொலைத்தொடர்பு ஆலோசனைகளை ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழங்கி வருகிறது. குறைந்த நேரத்தில் நோயாளிகளைக் கொண்டு சேர்க்கும்  சிறந்த ஆம்புலன்ஸ் சேவை, தரமான மருத்துவ சிகிச்சையில் கவனம், நல்ல ஆக்சிஜன், ஸ்டீராய்டுகள், ஆன்டி  கோயகுலன்ட்ஸ் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக குணமடைதல் விகிதம் 76.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் பயனாக, இறப்பு விகிதம் உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. இறப்பு விகிதம் தொடர்ந்து சரிவடைந்து தற்போது 1.81 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் குணமடைதல் விகிதம் கீழ்க்கண்டவாறு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நாட்டில் தற்போதைய உண்மையான பாதிப்பு (752,424), அதாவது,  மொத்த பாதிப்பில் 21.72 சதவீதம் மட்டுமே. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைய கோவிட்-19 பாதிப்புக்கும், குணமடைந்தோருக்கும் இடையிலான இடைவெளி சுமார் 19 லட்சமாக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ, அண்மைத் தகவல்களுக்கு தயவு செய்து இந்தத் தளங்களை அணுகவும்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva ஆகிய தளங்களை அணுகலாம்.

கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்: +91-11-23978046 or 1075 ( கட்டணமில்லாத் தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001K4O2.jpg



(Release ID: 1649532) Visitor Counter : 182