குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய குடியரசுத் தலைவர் 2020ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை காணொளிக் காட்சி வாயிலாக வழங்கினார்

Posted On: 29 AUG 2020 2:09PM by PIB Chennai

முதன் முறையாக காணொளிக் காட்சி வாயிலாக விருது வழங்கிய விழாவில், இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த், 2020ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 29, 2020) வழங்கினார், மேலும் இந்த விருது வென்றவர்களின் சாதனைகள், விளையாட்டில் இந்தியாவின் அபரிமிதமான திறனை நினைவூட்டுவதாகவும் கூறினார்.

 

மிக உயரந்த லட்சிய நோக்குடன் முன்னேறி 2028 ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லும் முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பெற ஆசைப்படுவதாகவும், இந்தியா விளையாட்டில் ஒரு சிறந்த சக்தியாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். பெங்களூரு, புனே, சோனேபட், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, டெல்லி, மும்பை, போபால், ஹைதராபாத் மற்றும் இட்டாநகர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 11 வெவ்வேறு மையங்களில் உள்ள அதிகாரிகள், விளையாட்டு நபர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது, "இந்த இலக்கை நாம் அடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இந்த விழாவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கான மத்திய மாநில அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு), திரு. கிரேன் ரிஜிஜு கலந்து கொண்டு புதுதில்லியில் இருந்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

***


(Release ID: 1649530) Visitor Counter : 171