பாதுகாப்பு அமைச்சகம்
14 வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது
Posted On:
28 AUG 2020 4:31PM by PIB Chennai
14 வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் (DPD) இன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலுக்குப் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர். அஜய் குமார் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரச் செயலாளர் (பாதுகாப்பு) திரு சான் ஹெங் கீ ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.
பாதுகாப்புக் கொள்கை உரையாடல்களின் முடிவில், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது.
***********
(Release ID: 1649287)
Visitor Counter : 285