சுற்றுலா அமைச்சகம்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன

Posted On: 28 AUG 2020 10:57AM by PIB Chennai

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாற்றி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்ப சபையில் இணைந்துள்ள மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 2020 மே 8ஆம் தேதி முதல் 2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருந்தன.



ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:
2020 மே மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 32 இணை மாநிலங்களில் 6141 பேர் பங்கேற்ற 27 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூன் மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 26 இணை மாநிலங்களில் 4167 பேர் பங்கேற்ற 52 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூலை மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை
மாநிலங்களில் 2966 பேர் பங்கேற்ற 17 நிகழ்ச்சிகளை நடத்தியது.
2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 20 நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டிருந்தது. இதுவரை 5 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. அவற்றின்
அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 15 நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" திட்டத்தின் கீழ் "ஆன்லைன் தேசிய கவிதை மற்றும் வாசிப்புப் போட்டிகளுக்கு " ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பதிவுகள் நாடெங்கும் தொடங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் தங்கள் இயற்றிய கவிதைகளையம் அவற்றின் வாசிப்பு அடங்கிய வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர்.

இவற்றின் மீதான தீர்ப்பு கவிதைகளின் கருத்துக்கள், மொழி நடை, கவிதைகளின் அசல் தன்மை மற்றும் கவிதை வாசிப்புச் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.



*****



(Release ID: 1649215) Visitor Counter : 244