அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாட்டின் அறிவியல் தொழில்நுட்பம், புதுமை, சூழல் அமைப்பு பற்றிய கொள்கை பற்றியும், பொதுவான அறிவியல் தொழில்நுட்ப புதுமை விஷயங்கள் குறித்தும், தங்களது கருத்துக்களையும் தொலைநோக்குப் பார்வையையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிந்தனையாளர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது

Posted On: 27 AUG 2020 1:03PM by PIB Chennai

இந்தியாவின் ஐந்தாவது தேசிய அறிவியல் தொழில்நுட்ப புதுமை கொள்கை எஸ் டி ஐ பி 2020 தொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து புதிய எஸ் டி ஐ பி 2020 கொள்கையை உருவாக்குவதற்காக, அனைவரையும் உள்ளடக்கிய, கீழிருந்து மேலான, பரவலாக்கப்பட்ட, வழி முறையை கையாள புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளன.

 

இந்தக் கொள்கையின் சாரத்தில் உண்மை தெளிவாக விளங்கும் அளவிற்கு, இந்தக் கொள்கை பற்றியும், பொதுவாக தேசத்தில் அறிவியல் தொழில்நுட்ப புதுமை சூழல் அமைப்பு குறித்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிந்தனையாளர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக இவர்களுடன் கலந்துரையாடல்” என்ற முயற்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டுள்ளது.

 

இந்தத் தொடர் நிகழ்ச்சியை 28 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை அன்று மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் துவக்கி வைக்கிறார். அமைச்சர், மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை செயலர் பேராசிரியர் அசுதோஷ் சர்மாவுடன் கலந்துரையாடுவார். இந்தக் கலந்துரையாடல் தொடரின், முதல் கலந்துரையாடல் இது. இது அறிவியல் கொள்கை அமைப்பு யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். யூடியூப் நிகழ்ச்சிக்கான இணைப்பு

https://www.youtube.com/watch?v=LhxV62_W5Sc https://youtu.be/LhxV62_W5Sc

*****


(Release ID: 1648963)