வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வடகிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழக நிறுவன அதிகாரிகள் (NERMAC) மற்றும் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் (FPOs) உரையாடுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2020 4:24PM by PIB Chennai

வடகிழக்குப் பிரதேச மேம்பாடு (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை, விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று இந்தியாவின் கோவிட்க்குப் பிந்தைய பொருளாதாரத்திற்கு வடகிழக்குப் பிராந்தியத்தில் வேளாண் துறை முக்கியமானது என்று தெரிவித்தார். வடகிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழக நிறுவனத்தின் (NERMAC) அதிகாரிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் உரையாடிய அவர், பல வணிக நிறுவனங்கள் வடகிழக்குப் பிராந்தியத்தை அதன் பரந்த வேளாண் விவசாய வளங்களை உபயோகப்படுத்த பார்க்கின்ற. இந்த சந்தர்ப்பத்தை நாம் இழக்கக்கூடாது. பழச்செறிவு மற்றும் பழச்சாறு ஆலைகள் போன்ற தொழில்களை அமைப்பதற்கான இலாபகரமான சலுகைகள் கிடைத்துள்ளதால், அதையே விரைவாகச் செயல்படுத்த முடியும் என்றார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், தனித்துவமான தயாரிப்புகளை அடையாளம் கண்டுகொள்வதன் மூலமும், வடகிழக்குப் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சந்தைகளில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அவற்றின் பிராண்டிங் மற்றும் விற்பனை மூலமாகவும் கோவிட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் லாபகரமான நிறுவனமாக மாறுமாறு வடகிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழக நிறுவனத்தை (NERMAC) கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு வாரத்திற்குள் அதற்கான வரைபடத்துடன் வருமாறு வடகிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழக நிறுவனத்தை (NERMAC) கேட்டு கொண்டார்.

<><><><><>


(வெளியீட்டு அடையாள எண்: 1648888) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu