சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சலுகைதாரர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் ஆலோசகர்களின் தரவரிசையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொள்ளவிருக்கிறது
Posted On:
26 AUG 2020 5:15PM by PIB Chennai
அதன் சலுகைதாரர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான நேர்மையான மற்றும் விரிவான 'செயல்திறன் தரவரிசை' அமைப்பை நிறுவுவதற்காக, 'விற்பனையாளர் செயல்திறன் மதிப்பீட்டு அமைப்பு' ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பல்வேறு பணிகளில் தொடர்புடைய விற்பனையாளர்களின் செயல்திறனைக் கண்காணிக்க இணையதளம் சார்ந்த விரிவான மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய இணையதளத்தில், 'விற்பனையாளர்களின் செயல்திறன் மதிப்பீட்டு முறை' என்னும் தலைப்பின் கீழ் இந்தத் தளம் கிடைக்கும். இந்தத் தளத்தின் கீழ், விற்பனையாளர்கள் தங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டை நடத்தி, அவர்கள் செய்து வரும் பணிகள் தொடர்பான கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. சமர்ப்பித்தத் தகவல்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பல்வேறு மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விற்பனையாளருக்கான மதிப்பீடு வழங்கப்படும்.
கட்டிமுடிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, மாற்றுவது - BOT (சுங்கம்), கட்டிமுடிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, மாற்றுவது - (வருடாந்திரம்), கலப்பு வருடாந்திர முறை (HAM), பொறியியல், கொள்முதல், கட்டுமானப் பணிகள் (EPC), மற்றும் ஆணையத்தின் பொறியாளர், தனிப்பட்டப் பொறியாளர் மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆலோசகர்கள் ஆகியோரின் பணிகளைச் செயல்படுத்தும் முறை மற்றும் நிறைவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான வசதி இந்தத் தளத்தில் உள்ளது. மிகவும் விரிவான மற்றும் நடுநிலையான முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்ய, பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் வழங்கப்பட்ட மதிப்பீடு விற்பனையாளரிடம் பகிரப்படும். வழங்கப்பட்ட மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விற்பனையாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
-----
(Release ID: 1648886)
Visitor Counter : 161