பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

நிரவ் மோடி வழக்கில் முதல் வெற்றி; கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் அமெரிக்காவிலிருந்து 3.25 மில்லியன் அமெரிக்க டாலரை மீட்டது

Posted On: 25 AUG 2020 7:38PM by PIB Chennai

வெளிநாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் நீதிமன்றத்தில் நடைபெறும் பெருநிறுவன நிர்வாக வழக்கைத் தலைமை தாங்கி நடத்திய மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் பணத்தை மீட்பதில் முதல் தவணையாக 3.25 மில்லியன் டாலர் (24.33 கோடி ரூபாய்க்கு சமம்) மீட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. யூஎஸ் சேப்டர் 11  மூலமாக கடனாளியின் சொத்துக்கள் பணமாக்கப்பட்டு 11.04 மில்லியன் டாலர் அளவிற்கு (82.66 கோடி ரூபாய்க்கு சமம்) பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பிணையில்லாக் கடன் கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக தயாராக உள்ளது. இதர செலவினங்கள் கடன் கொடுத்த பிறரது கோரிக்கைகளை பரிசீலித்து அடைப்பது ஆகியவற்றைப் பொறுத்து அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இவ்வாறு முதன்முறையாக 3.25 மில்லியன் டாலர் பணம் மீட்கப்பட்டது, இந்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளிநாட்டு எல்லைகளில் கார்ப்பரேட் மோசடிக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டத்திற்கு எதிர்பாராதஒருசாதனையாகும். குற்றம் புரிந்தவர்கள் அதாவது நிரவ் மோடி, மேஹுல் சோக்ஸி ஆகியோர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்/ அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்புகளிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி பணத்தைத் திரும்ப பெறுவதற்கான முயற்சிகளையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது.



(Release ID: 1648606) Visitor Counter : 195