பாதுகாப்பு அமைச்சகம்

இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய நிதியுதவித் திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுக்கின்றார்;


ராணுவ முகாம்களில் 10,000 தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை திரு.ராஜ்நாத் சிங் தொடங்கினார்

Posted On: 25 AUG 2020 5:21PM by PIB Chennai

இன்று நாடு முழுவதும் உள்ள 62 ராணுவ முகாம்கள் மத்திய நிதியுதவித் திட்டங்களைச் (CSS) செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறைச் சொத்துக்களின் இயக்குநரகம் (Directorate General of Defence Estates - DGDE) ஒரு இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

 

திரு. ராஜ்நாத் சிங் தனது தொடக்க உரையில், இந்தக் கருத்தரங்கம் பல்வேறு மத்திய நிதியுதவித் திட்டங்களின் நன்மைகளைத் தடையின்றி வழங்குவதற்கும், ராணுவ முகாம்களில் உள்ள சுமார் 21 லட்சம் குடியிருப்பாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான படியாகும் என்றார். ஆரோக்கிய பாரதம் (ஆயுஷ்மான் பாரத்), பிரத மந்திரியின் வீட்டு வசதித் திட்டம், பொலிவுறு நகரங்கள் இயக்கம், பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி, திரு. ராஜ்நாத் சிங், ராணுவமுகாம் பகுதிகளில் இந்த நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்றார்.  சுயசார்பு பாரதத்திற்காக பாதுகாப்பு அமைச்சகம் இறக்குமதியைக் குறைப்பதற்காக மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான கண்டுபிடிப்புகளையும் அரசாங்கம் வரவேற்கிறது என்றார்.

 

62 ராணுவ முகாம்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (தலைமை நிர்வாக அதிகாரிகள்) இரண்டு நாள் இணையக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் பல்வேறு நிதியுதவித் திட்டங்களின் செயல்பாட்டுப் பொறிமுறையையும், நிதியுதவியையும் நன்கு புரிந்துகொள்வது மற்றும் முகாம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இவற்றின் நன்மைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரிப்பது என்ற நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் இணைச் செயலாளர்கள் / ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட மாநிலத் துறைகளில் தொடர்புடைய மாநில திட்ட இயக்குநர்கள் மற்றும் முதன்மை செயலாளர்களும் இந்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

 

இணையக் கருத்தரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் ஒவ்வொரு ராணுவமுகாம் வாரியம் மூலம் இந்த விஷயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழித்தடத்தை அமைக்கும், மேலும் முகாம் பகுதிகளில் மத்திய நிதியுதவித் திட்டங்களின் (CSS) பயனாளிகளை அதிகப்படுத்தலாம்.

 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி) மூலம் குழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமான ராணுவ முகாம் கோவிட்: வீரர்கள் பாதுகாப்புத் திட்டம்', (‘சாவ்னி கோவிட்: யோதா சன்ரக்ஷன் யோஜனா’, ‘Chhavni COVID: Yodha Sanrakshan Yojana’) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் எந்தவொரு துரதிர்ஷ்டவசமான பேரழிவு ஏற்பட்டாலும், நாடு முழுவதும் 62 ராணுவ முகாம்களில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் தலா ஐந்து லட்சம் காப்பீட்டுத் தொகையை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பயனளிக்கும்.

 


(Release ID: 1648569) Visitor Counter : 227