ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நொய்டாவில் உள்ள தேசிய உரத் தொழிற்சசாலை வளாகத்தின் சுவர்கள் வார்லி ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன

Posted On: 25 AUG 2020 1:49PM by PIB Chennai

உரத்துறையின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான தேசிய உரங்கள் நிறுவனம் இந்திய கிராமியக் கலைகளை ஆதரிக்கும் நோக்கத்துடன் தனது நொய்டா கம்பெனி அலுவலகத்தின் வெளிச் சுவர்களில் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வார்லி சித்திரங்களைத் தீட்டி அலங்கரித்துள்ளது. பிரகாசமான சிவப்பு வண்ணத்தில் அமைந்துள்ள இந்தச் சித்திரங்கள் காண்போர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.

தேசிய உர நிறுவனத்தின் இந்த முயற்சி சுற்றுப்புறத்தை
அழகுபடுத்தியிருப்பதுடன் மக்களிடையே வார்லி ஓவியங்கள் குறித்த
ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது. வார்லி ஓவியங்கள் மகாராஷ்டிராவின்
கிராமங்களில் காணப்படுகின்றன அல்லது பெரிய கண்காட்சிகளில் மட்டுமே இடம்பெறுகின்றன. ஆனால்
, இப்போது பொதுமக்களும் இந்த ஓவியத்தை தேசிய உர நிறுவனத்தின் சுவர்களில் காண முடிகிறது.

 

-------


(Release ID: 1648505) Visitor Counter : 223