சுற்றுலா அமைச்சகம்

பெண்கள் பொருளாதார வலுவூட்டலுக்கான சுற்றுலாவை நிலையான வாழ்வாதார மாதிரியாக ஊக்குவிப்பதற்காக, சுற்றுலா அமைச்சகம் இந்தியாவின் பயண முகவர்கள் சங்கம் (TAAI) மற்றும் FICCI மகளிர் அமைப்பு (FLO) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Posted On: 21 AUG 2020 4:12PM by PIB Chennai

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) முன்னிலையில், முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) இன்று இந்திய பயண முகவர்கள் சங்கம் (TAAI) மற்றும் FICCI மகளிர் அமைப்பு (FLO) பெண்கள் அதிகாரமளிப்பதற்கான சுற்றுலா அமைச்சகத்துடன் கையெழுத்திட்டது. இந்த முயற்சியின் மூலம் மகளிர் அமைப்பு (FLO), இந்திய பயண முகவர்கள் சங்கம் (TAAI) தனிப்பட்ட விருந்தோம்பல் திறன்களுடன், இளக்கமான பணிச் சமநிலை மற்றும் கணிசமாக குறைந்த மூலதனத்துடன் தொழில்முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்,

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண்களைக் குறிவைத்து பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைத்து பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, இது அவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சமூக மட்டத்தில் முடிவெடுக்கும் ஒரு பகுதியாக இருக்க அவர்களுக்கு உதவுகிறது என்று திரு. படேல் தெரிவித்தார். எனவே, பயணம் மற்றும் சுற்றுலாத்துறையில் பெண்கள் முன்வந்து சுற்றுலா வளர்ச்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவதை உறுதிசெய்வது நமது தார்மீகப் பொறுப்பாகும், இது அந்தத் துறைக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மேம்பாட்டிற்கும், அதிகாரம் பெறுவதற்கும் உதவும். சுற்றுலாப் பயணிகள் வீட்டில் தங்க ஏதுவாக்குதல் (Homestays), சுற்றுலா வசதிகள், கேட்டரிங் வர்த்தகம் போல பெண்கள் சிறந்து விளங்கக்கூடிய பல பகுதிகள் சுற்றுலாவில் உள்ளன.

இந்தியப் பயண முகவர்கள் சங்கம் (TAAI) மற்றும் FICCI மகளிர் அமைப்பு (FLO) ஆகியவற்றால் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் நாடு முழுவதும் உள்ள அவர்களுக்குப் புதிய அத்தியாயங்களைத் தொடங்கி வைப்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சுற்றுலா அமைச்சகம், இந்தியப் பயண முகவர்கள் சங்கம் (TAAI) மற்றும் FICCI மகளிர் அமைப்பு (FLO)  இடையே இன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், அவர்களை சுற்றுலாப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கும் அடிமட்ட நிலை வரை கைகோர்க்கவும், முன்முயற்சிகளை எடுக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

**************



(Release ID: 1647675) Visitor Counter : 184