பாதுகாப்பு அமைச்சகம்

முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்து விவாதிக்குமாறு கடற்படைத் தளபதிகளை, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்

Posted On: 19 AUG 2020 5:35PM by PIB Chennai

கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் துவக்க நாளான இன்று (19 ஆகஸ்ட் 2020) மத்தியப் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதிகளுடன் உரையாடினார். தேசத்தில் கடல் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியக் கடற்படை வீரர்கள், வீராங்கனைகள் ஆற்றிவரும் பங்கு குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். கப்பல்களையும், விமானங்களையும் நன்கு இயக்கித் தாமாகவே முன்வந்து நாட்டைப் பாதுகாப்பதன் மூலம் எந்த விதமான சவாலையும் சமாளிக்கக் கூடிய ஆயத்த நிலையில், இந்தியக் கடற்படை இருப்பது குறித்து, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள எதிர்பாராத சவால்கள் குறித்துப் பேசிய அமைச்சர், இதுவரை இல்லாத அளவிற்கு அயல்நாடுகளிலிருந்து, தாய்நாட்டிற்கு மக்களைத் திருப்பி அழைத்து வந்த மிகப்பெரிய சேவைக்காக இந்திய கடற்படைக்குப் பாராட்டு தெரிவித்தார். சமுத்திர சேது இயக்கம் தேசிய நலனுக்கு பெரும் பங்காற்றியது. கடல் சூழல் மிக சிரமமானதாக இருந்த போதிலும், கரோனா வைரஸ் என்ற காணமுடியாத எதிரியின்  உருவில் ஏற்பட்ட சவால்களை சமாளித்து, இந்துமாக்கடல் மண்டலத்தில் உள்ள அண்டை நாடுகளில் இருந்து சுமார் 4000 மக்களை தாயகத்திற்கு அழைத்து வந்ததற்கு, இந்தியக் கடற்படை காரணமாக இருந்தது. சாகர் இயக்கத்தின் கீழ் தென்மேற்கு இந்துமாக்கடல் மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கு (மாலத்தீவு மொரீசியஸ், கமொரோஸ், செஷல்ஸ், மடகாஸ்கர்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது. கோவிட் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கு, சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தனிமைப்படுத்தப்படும் வசதிகளை உருவாக்கித் தந்தமைக்காக அனைத்து கடற்படைத் தளபதிகளும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் அமைச்சர் பாராட்டினார். இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும், வளர்ச்சியும் (Security And Growth for All in the Region - SAGAR) என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையினால் எழுச்சி பெற்ற இந்தியக் கடற்படை, கடல்வழி நலன்கள் காப்பதற்காக கடற்படை கப்பல்களையும்,விமானங்களையும் முக்கியமான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளன. இதற்காக இயக்க அடிப்படையில் இவை இயங்குகின்றன என்று திரு.ராஜ்நாத் சிங் கூறினார் இயக்க அடிப்படையிலான தகுந்த இடங்களில், கப்பல்களையும் விமானங்களையும் நிறுத்துதல் என்பது ஜூன் 2017 முதல் தொடங்கப்பட்டது. இதனால் கடல்வழிப்பாதுகாப்பு, விழிப்புணர்வு (Maritime Domain Awareness - MDA), ஏற்படுத்தப்பட்டது. இந்துமாக்கடல் மண்டலப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் (swift Humanitarian Aid and Disaster Relief - HADR) வழங்குவதை விரைவுபடுத்த முடிந்தது. சர்வதேசக் கடல் வழி சமுதாயத்திற்கும், பாதுகாப்பு அளிக்க முடிந்தது. இராணுவப் படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரிதமான மாற்றங்கள் குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சி டி எஸ் பதவியை உருவாக்கியதன் அவசியம் குறித்தும், இராணுவ விவகாரங்கள் துறை ஏற்படுத்தப்பட்டதன் அவசியம் குறித்தும், முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பைக் கொண்டுவர இவை முக்கிய மைல் கற்களாக அமைந்தன என்றும், குறிப்பாக பயிற்சி, தளவாடங்கள் வாங்குதல், பணியாட்கள், இயக்க செயல்பாடுகளில் இணைந்த செயல்பாட்டைக் கொண்டுவருதல் ஆகியவற்றுக்கு இவை உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.


(Release ID: 1647195) Visitor Counter : 248