பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படைத் தளபதிகளின் மாநாடு 2020 முன்னோட்டம்
Posted On:
18 AUG 2020 6:21PM by PIB Chennai
கடற்படைத் தளபதிகள் மாநாடு 2020 புதுதில்லியில் 19 ஆகஸ்ட் 2020 முதல் 21 ஆகஸ்ட் 2020 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு கடற்படைத் தளபதிகளுக்கிடையேயான உச்சநிலை கலந்துரையாடும் நிகழ்ச்சியாகும். கடற்படை இராணுவத் தலைமைத் தளபதி, இதர தளபதிகளுடன் உரையாடி, இந்த ஆண்டின் முக்கியமான இயக்க ரீதியான செயல்பாடுகளையும், இராணுவத் தளவாடங்கள், போக்குவரத்து, மனித ஆற்றல் மேம்பாடு, பயிற்சி, நிர்வாகச்செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விவாதிப்பார்.
நமது வடக்கு எல்லைப்பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்; கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் காரணமாக, எதிர்பாராமல் நேரிட்ட பல்வேறு சவால்கள்; ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்த மாநாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பெருந்தொற்று காரணமாக உருவாகியுள்ள புதிய இயல்பு வாழ்க்கையில், வரையறைக்குட்பட்டு எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வது’ சொத்துக்களைத் தொடர்ந்து பராமரிப்பது; தளவாடங்கள் வாங்குவது; கட்டமைப்பு மேம்பாடு; மனித ஆற்றல் மேம்பாடு; போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான உயர்நிலை கடற்படைத் தலைமை தளமாக இது அமையும்.
துவக்க நாளன்று மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் கடற்படைத் தளபதிகளிடையே உரையாற்றி, அவர்களோடு கலந்துரையாடுவார். இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதிகள், இதர மூத்த அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்கள்.
மத்திய இராணுவ விவகாரங்கள் (டி எம் ஏ) பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தலைவர் துறை அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது கடற்படைத் தளபதிகள் மாநாடாகும் இது. இணைந்து திட்டக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்; முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆற்றலை மேம்படுத்துதல்; எப்போதும் இயக்க ஆயத்த நிலையில் இருத்தல்; இந்தியக் கடற்படைக்கு உள்ளேயே திறனை அதிகரிக்கும் வகையில் மறுஅமைப்பு செயல்பாட்டுக் கட்டமைப்பு; போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் “மண்டலம் முழுவதிலும் உள்ளவர்களுக்கு பாதுகாப்பும் வளர்ச்சியும்” சாகர் (SAGAR - Security and Growth for All in the Region), என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, இம்மாநாட்டில் இந்திய பசிபிக் பகுதியில் அதிக அளவிலான பாதுகாப்பின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
(Release ID: 1646777)
Visitor Counter : 238