ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தெலுங்கானா மாநிலத்திற்கு போதுமான அளவு யூரியா கிடைப்பது உறுதி செய்யப்படும்: திரு கவுடா

Posted On: 18 AUG 2020 5:52PM by PIB Chennai

நடப்பு கரீப் பருவக் காலத்தின் போது, போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தமது அமைச்சகம் உரங்கள் வழங்கப்படுவதை, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,  மத்திய ரசாயனங்கள், உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா கூறியுள்ளார்.

தெலுங்கானாவிற்கு யூரியா கிடைப்பது தொடர்பாக தெலுங்கானா வேளாண் அமைச்சர் திரு சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி இன்று புதுதில்லியில் திரு.கவுடாவைச் சந்தித்தார் தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு கரீஃப் பருவத்தில் பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளது; சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கரீஃப் பருவ காலத்தில் யூரியா விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என்று திரு.ரெட்டி கூறினார். நடப்பு மாதத்தில் தெலுங்கானாவிற்கு யூரியா விரைவில் கிடைக்க வகை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200818-WA0083(1)AFAQ.jpg


மாநிலத்திற்கு வழங்கப்படும் யூரியா குறித்து, உரங்கள் துறை, தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறிய திரு.கவுடா, இது தொடர்பாக வாராந்திர காணொளி மாநாடும் நடத்தப்படுவதாகவும் கூறினார் அதிகாரிகளுக்கிடையே தினசரி கலந்துரையாடலும் நடைபெறுகிறது என்றும் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின் படி, மாநிலத்திற்கு யூரியா வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்கான தேவையான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும் திட்டம் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்



(Release ID: 1646757) Visitor Counter : 153