உள்துறை அமைச்சகம்

பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 AUG 2020 8:32PM by PIB Chennai

பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் மிகச் சிறந்த இசைக்கலைஞர், தமது இனிமையான குரலால் இந்திய செவ்வியல் இசையை வளப்படுத்தியவர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பைப் போன்றது. அவரது ஈடு இணையற்ற பாடல்களால் நமது உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.

இந்திய செவ்வியல் இசையில் மிக முக்கியமான பாடகர்  பண்டிட் திரு ஜஸ்ராஜ் ஆவார். 2000 ஆம் ஆண்டில், அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1646634) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu