சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்கள் பற்றிய அறிக்கை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்கிறது

Posted On: 16 AUG 2020 12:08PM by PIB Chennai

சாலை கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்களின் பாதுகாப்பு, இவற்றை இயக்குவர்களுக்கான பாதுகாப்பு, இந்த வாகனங்கள் சாலைகளில் இதர வாகனங்களுடன் பயணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஆகியவை குறித்த பிரச்சினைகள் குறித்துத் தீர்வு காண்பதற்காக கட்டம் கட்டமாக (முதல் கட்டம் ஏப்ரல் 21 இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24) வரைவு அறிவிக்கை வரைவு அறிவிக்கை எண் ஜி எஸ் ஆர் 502 (இ)

ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 13 ஆகஸ்ட் 2020 அன்று வெளியிட்டுள்ளது.

 

தற்போது, கட்டுமானப் பணிகளுக்கான, வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிகள் சில ஏற்கனவே மத்திய மோட்டார் வாகன விதிகள்1989 படி வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தத் தரம் ஆட்டோமோட்டிவ் தொழில்துறைத் தரம் 160 தரத்துக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. இதனால் பாதுகாப்புக்குத் தேவையான பல அம்சங்களுக்கான பாதுகாப்புத் தேவைகள் அறிமுகப்படுத்தப்படும். சில அம்சங்கள் பின்வருமாறு: காட்சிப்பட வசதிகள்; இயக்குபவர் இடத்தின் தேவைகள்; பராமரிப்புப் பகுதிகளின் தேவைகள்; உலோகத்தால் அல்லாத எரிபொருள் டேங்க்; மினிமம் ஆக்சஸ் டைமென்ஷன் குறைந்தபட்ச ஆக்சஸ் கொண்ட பரிமாணங்கள்; படிகளுக்கான வழி அமைப்பு; முதன்மை வழி; வெளியேறுவதற்கான மாற்றுப்பாதை, மாற்று வாயில்; பராமரிப்பு வாயில்; கைப்பிடிகள்; கரம் பற்றிக் கொள்வதற்கான அமைப்புகள்; பாதுகாப்பான்கள்; காட்சிப்படத் தேவைகள்; இயந்திரங்களில் பொருத்தப்பட்ட பயண எச்சரிக்கை ஒலிக்கருவிகள்; ஆர்டிக்குலேட்டர் பிரேம்லாக்; லிஃப்ட் ஆஃப் கருவிக்கான உதவிக்கருவிகள்; வாகனங்களை இயக்குபவரின் இருக்கைக்கான பரிமாணங்கள்; தேவைகள்; மின்காந்த இசைவுத் தன்மை; இருக்கை இடுப்புப்பட்டைகள், அவற்றைப் பொருத்துவதற்கான அமைப்புகள்; ரோல் ஓவர் பாதுகாப்புக் கட்டமைப்பு (ஆர் ஓ பி எஸ்); டிப் ஓவர் பாதுகாப்புக் கட்டமைப்பு (டி ஓ பி எஸ்) கீழே விழும் பொருள்களுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பு (ஃப் ஓ பி எஸ்); இயக்குபவர்கள் இயக்கப் பகுதியைப் பார்ப்பதற்கான வியூ; சஸ்பெண்டெட் இருக்கைக்கான இயக்குபவர் இருக்கைகள் அதிர்வுகள்; போன்றவை.

 

இவை தவிர, கூடுதலாக, வெளியிலிருந்து வரும் சத்தங்களும், வாகனத்தை இயக்குபவரின் காதுக்கு அருகே கேட்கப்படும் சத்தங்களின் ஒலி அளவும் சரியான விகிதத்தில் இருப்பதற்கான தேவைகள்; மத்திய மோட்டார் வாகன விதிகள் முன்னதாக ஜி எஸ் ஆர் 642 அறிவிக்கை 28 ஜூலை 2000 இன் படி வரையறுக்கப்பட்டிருந்த இரு விதிகளை -- 96 ஏ பிரேக் ஸ்டீயரிங் எஃபர்ட்;98 ஏ வாகனத்தைத் திருப்பும் போதான வட்டத்தின் விட்டம் ஆகியவற்றைத் திருத்திமைத்தல்.

 

பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்கள் வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களை இயக்குபவர்களின் பாதுகாப்பு; இந்த வாகனங்கள் பொதுச் சாலைகளில் செல்கையில் பாதுகாப்பு; ஆகியவற்றுக்கான தேவைகளை, அறிவிக்கைகள் மூலமாக தெரியப்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை எம் விஎல் இணைச் செயலருக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்றத் தெரு, புதுடில்லி 1110001என்றமுகவரிக்குஅனுப்பலாம்.

மின்னஞ்சல்: jspb-morth[at]gov[dot]in அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்துக்கள்/ஆலோசனைகள்அனுப்பப்பட வேண்டும்

***



(Release ID: 1646406) Visitor Counter : 187