ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தேசிய உர நிறுவனத்தின் பானிபட்டு தொழிற்சாலைக்கு திரு மன்சுக் மண்டாவியா வருகை

प्रविष्टि तिथि: 16 AUG 2020 6:19PM by PIB Chennai

மத்திய ரசாயனங்கள்  மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, பானிபட்டில் உள்ள தேசிய உர நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு இன்று வருகை தந்தார்.

     அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த திரு மன்சுக் மண்டாவியா, பெருந்தொற்றுக் காலத்திலும் சிறப்பான பணிகளைச் செய்ததற்காக  தொழிற்சாலை அலுவலர்களுக்கு வாழ்த்து  தெரிவித்தார்.

     கொவிட்-19 முடக்க நிலைக் காலத்தில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், தேசிய உர நிறுவனத்தின் விற்பனை 71 விழுக்காட்டை அடைந்துள்ளது.

     அந்தத் தொழிற்சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர், தரமான அதிகபட்ச உற்பத்தியை எட்டவும், மண் வளத்தைத் தக்க வைக்கவும், மண் பரிசோதனை அவசியம் என்று தெரிவித்தார். அங்குள்ள நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தைப் பார்வையிட்ட அவர், உரங்களை சமவிகிதத்தில் பயன்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு, அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, வளர்ச்சியையும். வலிமையையும் குறிக்கும் வகையில், மரக்கன்று ஒன்றையும் திரு மண்டாவியா நட்டார்.

*****


(रिलीज़ आईडी: 1646386) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu