எஃகுத்துறை அமைச்சகம்
திரு. தர்மேந்திர பிரதான் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
प्रविष्टि तिथि:
15 AUG 2020 1:57PM by PIB Chennai
மத்திய எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இன்று 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரு ட்வீட் செய்தியில் ‘பாரதம் முதல் சுயசார்பு பாரதம் வரை: மாற்றத்தின் சக்கரம்’ என்று கூறிய திரு. பிரதான், “உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்னணியில் நமது முன்னுரிமைகள் மோடி அரசாங்கத்தின் கீழ் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்றார். சமீப காலங்களில், ஒரு தன்னம்பிக்கை கொண்ட இந்தியா அல்லது சுயசார்பு பாரதம் உலகமயமாக்கலுடனோ அல்லது சர்வதேசவாதத்துடனோ ஒத்துப்போகுமா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. சர்வதேசவாதம் பல நேர்மறைகளைக் கொண்டிருந்தாலும், தற்போதைய கோவிட்-19 தொற்று நெருக்கடியின் போது அதன் வரம்புகளும் தெளிவாக தெரிந்தன. உள்நாட்டு முன்னணியில் நெருக்கடியைக் கொண்டிருந்ததற்காக, புரிந்துகொள்ளத்தக்க வகையில், ஒவ்வொரு நாடும் பின்வாங்கியது. எனவே, நாம் தன்னிறைவு பெறுவது என்பது நமது சர்வதேசக் கடமைகள், கூட்டாண்மைகள் மற்றும் பொறுப்புகளை நாம் கைவிடுகிறோம் என்பதற்கான அறிகுறியல்ல. ஆனால் நமது தேசியப் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தெளிவான நோக்கம் மட்டுமே.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா ஒரு பொறுப்பான உலகளாவிய செயல்வீரராக இருந்து வருகிறது. நமது நாகரிக நெறிமுறைகள் "வாசுதீவா குடும்பம்" அல்லது உலகளாவிய குடும்பத்தின் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது. இயற்கையை நமது தாயாகவும், அதன் ஒவ்வொரு வம்சாவளியையும் நமது நீட்டிக்கப்பட்ட குடும்பமாகவும் கருதுகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல சீர்திருத்தங்கள் செல்வத்தை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றிற்கான செயல்வீரர்களின் பரந்த பங்களிப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும், போட்டிச் சந்தைகளின் சக்தியைக் கட்டவிழ்த்துவிட உலகளாவிய தொழில்நுட்பத்தைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இந்த வளர்ச்சிப்பாதை ஒரு தனித்துவமான இந்திய மாதிரியைப் பின்பற்றும், அங்கு உள்நாட்டு நலன்கள் எல்லாவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில், ”உலகளாவிய அளவில் இந்தியா தொடர்ந்து அந்தஸ்தைப் பெறும். ”
****
(रिलीज़ आईडी: 1646086)
आगंतुक पटल : 232