மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சுயசார்பு பாரதம் - சுதந்திர பாரதம் குறித்த கட்டுரை சமர்ப்பிக்கும் தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 23, 2020 வரை நீட்டிக்கிறது.

Posted On: 14 AUG 2020 7:24PM by PIB Chennai

நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, MyGov உடன் இணைந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி மாணவர்களில் குறிப்பிட்ட வயதினருக்கான இணையம் வாயிலாகக் கட்டுரை எழுதும் போட்டியை (IX முதல் X அல்லது இரண்டாம் நிலை மற்றும் XI முதல் XII அல்லது உயர்நிலை வரை ) நாடு முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது. ”சுயசார்பு பாரதம் – சுதந்திர பாரதம்” குறித்த கட்டுரை சமர்ப்பிக்கும் தேதியை ஆகஸ்ட் 23, 2020 வரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் இந்த நிகழ்விற்கான இத்திட்டத்தின் முகமையாக இருக்கும்.

 

கட்டுரை எழுதுவதற்கான முக்கிய தலைப்பின், அதாவது ”சுயசார்பு பாரதம் – சுதந்திர பாரதம்” கீழ் உள்ள துணை தலைப்புகள் பின்வருமாறு:

 

  1. சுய சார்பு பாரத்தைப் பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பும் ஜனநாயகமும் மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றன.
  2. 75 வயதில் இந்தியா: சுயசார்பு பாரத்தை நோக்கி ஒரு நாடு அணிவகுக்கிறது.
  3. ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலம் சுயசார்பு பாரதம்: பன்முகத்தன்மையில் ஒற்றுமை இருக்கும்போது புதுமை செழிக்கிறது
  4. டிஜிட்டல் இந்தியா: COVID-19 மற்றும் அதற்கு பின்னால் உள்ள வாய்ப்புகள்
  5. சுயசார்பு பாரதம் - தேசிய வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு
  6. சுயசார்பு பாரதம் - பாலினம், சாதி மற்றும் இன சார்புகளிலிருந்து சுதந்திரம்.
  7. சுயசார்பு பாரதம் - உயிர் பன்முகத்தன்மை மற்றும் விவசாய செழிப்பு மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல்.
  8. நான் எனது உரிமைகளைப் பயன்படுத்தும்போது, ​​ஒரு சுயசார்பு பாரதத்தில் ஈடுபடுவதற்கு எனது கடமைகளைச் செய்ய நான் மறந்துவிடக் கூடாது.
  9. எனது உடல் ஆரோக்கியமே எனது செல்வமாகும். அது சுயசார்பு  பாரத்துக்கான மனித மூலதனத்தை உருவாக்கும்.
  10. ஒரு சுய சார்பு பாரதம் பச்சை நிறத்திற்கு செல்ல நீலத்தை பாதுகாக்கவும்.

ஆகஸ்ட் 23, 2020 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் உள்ளீடுகளை கீழே உள்ள இணைப்பில் சமர்ப்பிக்கலாம்:

https://innovate.mygov.in/essay-competition

 

*****



(Release ID: 1645969) Visitor Counter : 2518