புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்களுக்குக் கால நீடிப்பு

Posted On: 14 AUG 2020 7:14PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy) நியமித்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்ட அமலாக்க முகமைகள் மூலம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டிருந்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்கள் அனைத்துக்கும் கால அவகாசம் ஐந்து மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் மார்ச் 25ஆம் தேதி அமலுக்கு வந்ததை அடுத்து, இந்தக் கால அவகாசம் நீடிக்கப்படுகிறது. இதைப் போல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொடங்க உத்தேசிக்கப்பட்ட திட்டங்களும் கால நீடிப்பு பெறுகின்றன.

இத்திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனி) ஆர்.கே. சிங் அளித்தார். இந்த முடிவு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட அமைச்சகத்தின் அலுவலகப் பதிவுக் குறிப்புக்கு (Office Memorandum) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19” தொற்று காரணமாகப் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், தாங்கள் திட்டத்தைத் தொடங்குவதற்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடுவோர் அமைச்சகத்திடம் முறையிட்டனர். பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பிறகும் திட்டம் தொடங்குவதற்கு உகந்த சுமுகநிலை ஏற்படும் வரையில் அவகாசம் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்ட பிறகு இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதைய சூழலில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து புதுப்பிக்கத் தக்க எரிசக்தி செயலாக்க ஏஜென்சிகளும்கோவிட்-19” தொற்று காரணத்தால் தங்களது திட்டங்களைத் தொடங்க இயலாத அசாதாரண நிலை ஏற்பட்டதாகக் கருதப்படும்.

அனைவருக்குமான இந்த நீடிப்பைக் கோரும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரிடமும் ஆவணமோ, சான்றுகளோ கேட்கப்பட மாட்டாது. புதிதாகத் தொடங்குவதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்ட காலத்திலேயே ஏற்கெனவே பணி தொடங்கியவர்களுக்கும் கால அவகாசம் தரப்படும்.

மாற்று எரிசக்தித் திட்டத்தில் ஈடுபடுவோர் அவர்களைச் சார்ந்துள்ள  பொறியியல் கொள்முதல் கட்டமான காண்ட்ராக்டர்கள் (Engineering Procurement Construction contractors), பொருள்கள், உபகரண சப்ளை செய்வோர், மூல உபகரண உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கும் உரிய கால அவகாசத்தை விரிவுபடுத்தலாம்.

அலுவலகப் பதிவுக் குறிப்பில் (OM) மாநிலங்களின் மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் உள்ளிட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறைகளும் கோவிட்-19 தொற்று காரணமாக நடைமுறைக்கு வந்துள்ள பொதுமுடக்கக் காலத்தைத் திட்டம் தொடங்க இயலாத அசாதாரண நிலை ஏற்பட்டதாகக் கருதலாம். அதற்கேற்ப கால அவகாசத்தை அளிக்கலாம்.

****



(Release ID: 1645940) Visitor Counter : 142