பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பழங்குடியினரின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட பங்காக்கள் பிரபல விருந்தினர்களுக்கு வழங்கப்படும்; பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கூட்டமைப்பு மீண்டும் ஏற்பாடு

Posted On: 14 AUG 2020 2:44PM by PIB Chennai

 பழங்குடியினரின் வருமானங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை ஆதரித்து, நிலைநிறுத்திடும்  தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக சுகந்திரதினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பழங்குடியினரின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட பங்காக்களை வழங்க பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (ட்ரைபெட்) பாதுகாப்பு அமைச்சகத்துடன் மீண்டும் கூட்டு சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒத்துழைப்பு இது மூன்றாவது ஆண்டாகும்.

 

ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், குஜராத் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள பழங்குடியினக் கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த பங்காக்கள் நட்புறவான சுற்றுச்சூழலில் இயற்கையான கரிமப் பொருள்களால் உருவாக்கப்பட்டவை. ஒரு நினைவுச்சின்னமாக இந்த பங்காக்கள் இந்தியக் குடும்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கடந்த கால நினைவுகளை மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன, மேலும் கடுமையான வெப்பத்தின் போது ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன.

 

பழங்குடியினரின் இந்திய பங்காக்கள், நாடு முழுவதும் உள்ள ட்ரைப்ஸ் இந்தியா சில்லறை விற்பனை நிலையங்களிலும், அதன் மின்னணு வணிக தளத்திலும் ( www.tribesindia.com ) விற்பனைக்கு கிடைக்கின்றன.

 

*****



(Release ID: 1645783) Visitor Counter : 138