ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையப் பாதுகாப்பின் கீழ் கர்நாடகாவில் அமைக்கப்பட்ட விலை கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு

Posted On: 13 AUG 2020 6:18PM by PIB Chennai

இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், மருந்துத்துறை, கர்நாடகாவில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய (NPPA), பாதுகாப்பின் கீழ் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு (PMRU) அமைக்கப்பட்டுள்ளது.

இதை அறிவிப்பதற்காக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா ட்வீட் செய்துள்ளார்.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) பாதுகாப்பின் எல்லைகளை அதிகரிப்பதற்காக மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாநில அளவில் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு (PMRU) செயல்படும். இந்த விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு (PMRU) சங்கங்கள் அதன் சொந்த சங்க அமைப்பு விதிக்குறிப்புகள் / துணைச் சட்டங்கள் ஆகியவற்றுடன் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஆகும். விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவின் (PMRU) நிர்வாக குழுவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் பிற பயனாளர்களும் உள்ளனர்.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), அதன் மத்தியத் துறைத் திட்டத்தின் கீழ் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM), ஏற்கனவே கேரளா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, நாகாலாந்து, திரிபுரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, மிசோரம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவை (PMRU) அமைத்துள்ளது. அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவை (PMRU) அமைக்க தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய (NPPA) அமைப்பு திட்டமிட்டுள்ளது.

விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவின் செலவுகள், மீண்டும் தொடரும் மற்றும் மீண்டும் தொடரா அல்லது புதிய திட்டத்தின் கீழ் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) கீழ் அமைக்கப்படும்.

தற்போது வரை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) தலைமையிடமாக டெல்லியில் மட்டுமே உள்ளது மற்றும் மாநிலங்கள் / யூனீயன் பிரதேசங்களில் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவை (PMRU) அமைப்பதன் மூலம், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மாநில அளவிலும் அதன் எல்லைகள் மேம்படும்.

************



(Release ID: 1645687) Visitor Counter : 247