சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
2020-21-ஆம் தேர்வு ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2020 5:12PM by PIB Chennai
2020-21-ஆம் தேர்வு ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உயர் தர நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவரின் முன்னேற்றத்துடன் பராமரிப்புப் படி இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சரிபார்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஆய்வு ரத்து செய்யப்பட்டு, சுய உறுதிமொழி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் அறிமுகத்துடன், தேர்வு முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அனைத்து இடங்களும் குறுகிய காலத்தில் நிரப்பப்படக்கூடும். முதல் காலாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், மொத்தமுள்ள 100 இடங்களில், இதுவரை 42 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது காலாண்டுக்கான தேர்வு நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1645678)
வருகையாளர் எண்ணிக்கை : 166