சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்வதற்கான தேசிய நிபுணர் குழு கலந்தாய்வு

Posted On: 12 AUG 2020 5:28PM by PIB Chennai

கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி கூடியது. நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணைத் தலைவராக இதில் பங்கேற்றார்.

தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச் செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக் குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான நபர்களைத் தேர்வு செய்வதற்கு விரிவான விதிமுறைகள் பற்றி குழுவினர் விவாதித்தனர். இதற்கான அறிவுறுத்தல்களை தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு (NTAGI) அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து  கோவிட்-19 தடுப்பூசி மரு்துகளை வாங்குவது, இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவிட்-19 தடுப்பூசி மருந்து வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். தடுப்பூசி மருந்துகளை கொண்டு போய் சேர்க்கும் வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், அதுதொடர்பான இதர கட்டமைப்பு வசதிகள் பற்றியும் ஆலோசனைகள் நடந்தன. மேலும், சமன்நிலை அளவில் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும், இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்தும், அந்த நோக்கில் கண்காணிப்பது குறித்தும், வெளிப்படையான  தகவல் அளிப்பு மற்றும் விழிப்புணர்வு உருவாக்குதல் மூலம் சமுதாயப் பங்கேற்பை ஏற்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.

கோவிட்-19 தடுப்பூசி விஷயத்தில் முக்கியமான பக்கத்து நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு பற்றியும் கருத்துப் பகிர்வுகள் இருந்தன. தடுப்பூசி மருந்து உற்பத்தித் திறனை உள்நாட்டில் உருவாக்குவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதுடன், இதுகுறித்து சர்வதேச அளவிலும் ஈடுபாடுகள் காட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் விரைவாக தடுப்பூசி மருந்துகள் கிடைக்கச் செய்வதிலும் இந்த வகையிலான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

*****(Release ID: 1645436) Visitor Counter : 276