அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். வைனு பாப்புவின் ஆர்வத்தை நிலைநிறுத்திப் பராமரிக்க இளைஞர்களின் கருத்துக்களை அனுபவத்துடன் கலந்து இணைக்கலாம்: இந்த நிறுவனத்தின் நிறுவனர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரமுகர்கள் கருத்து

Posted On: 12 AUG 2020 1:06PM by PIB Chennai

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்.வைனு பாப்புவின் ஆர்வத்தையும் ஆற்றலையும் நிலைநிறுத்திப் பராமரிக்க, இளைஞர்களின் கருத்துக்களை 50 ஆண்டு காலமாகக் கிடைத்த அனுபவத்தை அறிவுடன் கலந்து இணைக்க வேண்டியது அவசியம் என்று இந்த நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் வலியுடறுத்தினார்கள் .

"டாக்டர். வைனு பாப்புவின் பெரும் தொலைநோக்குடன் தொடங்கப்பட்ட இந்த அறிவியல் நிறுவனத்தின் வரலாற்றில் இந்த 50 வது ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அறிவியல் மற்றும் ஆத்மநிர்பர் பாரதம் ஆகியவற்றின் தற்போதைய மறுசீரமைப்புக் கால கட்டத்தில், இவரைப் போன்ற மேலும் பல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தொடக்கக் காலத்தில் இந்த நிறுவனத்துக்கு இருந்த ஆற்றலும், ஆர்வமும் தற்போது கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்துள்ள அறிவு மற்றும் அனுபவத்தினால் வளபடுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்ல சிறந்த இளைஞர்களுடனும் புதிய கருத்துகளுடனும் இந்த ஆற்றலை இணைக்க வேண்டும்" என்று இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறைவு
விழாக் கொண்டாட்டத்தில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார். "தரமான மனிதவளம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை உருவாக்குவதிலும் கூர்நோக்கு வானியல் மற்றும் ஆழ்ந்த அறிவியல ஆகியவற்றை அளிப்பதிலும் இந்த நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல் பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சுயாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நிறுவனர் தினத்தை ஆன்லைன் மூலம் கொண்டாடியது.  மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜயராகவன், நிறுவனர் தின உரையை நிகழ்த்தினார். நவீன இந்திய வானியற்பியல் நிறுவனம் அமைவதற்குப் பெரும் பங்காற்றிய டாக்டர். மணாலி கல்லாட் வைனு பாப்புவின் பிறந்த நாள் அதன் நிறுவனர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் நிறுவனர் தினக் கொண்டாட்டங்களுடன் இந்திய வானியற்பியல் நிறுவனம் தனது 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


 

*****



(Release ID: 1645343) Visitor Counter : 105