நித்தி ஆயோக்

அடல் புதுமை இயக்கமும், டெல் டெக்னாலஜிசும் இணைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

प्रविष्टि तिथि: 11 AUG 2020 6:16PM by PIB Chennai

நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம், டெல் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து, மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 (Student Entrepreneurship Programme 2.0 - SEP 2.0) திட்டத்தை அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடங்களில் உள்ள இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளன.

 

மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 1.0 பெருமளவில் வெற்றி பெற்றதைடுத்து, இதன் இரண்டாவது தொடராக, மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார்; டெல் டெக்னாலஜிஸ் தலைவரும் நிர்வாக இயக்குருமான திரு.அலோக் ஓஹ்ரி; இந்த இயக்கத்தின் இயக்குர் திரு.ஆர் ரமணன்; லேர்நிங் லிங்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.அஞ்சலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அடல் ஆய்வுக்கூடங்களில் உள்ள இளைய முன்னோடிகளைப் பார்க்கும் போது, அவர்கள் நிகழ்த்த உள்ள புதுமைகள் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். தங்களுடைய சக குடிமக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு பாரம்பரியமற்ற முறையில் சிந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டால், இந்நாட்டிலுள்ள இளைஞர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதை இந்த இளைஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 1.0 நிறைவடைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 துவங்கப்படும் இந்தத் தருணத்தில், இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையான பல விஷயங்கள் நாட்டில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணிப் பார்ப்பதில் பெரும் உவகை அடைகிறேன் என்று நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர்.ராஜீவ் குமார் கூறினார்.

 

புதுமைகளை நிகழ்த்தும் மாணவர்கள், டெல் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 உதவும். மாணவர்களுக்கு வழிகாட்டியின் ஆதரவு, மாதிரிகள் தயாரித்தல், பரிசோதனை செய்தல் ஆகியவற்றுக்கான ஆதரவு, பயன்படுத்துபவர்களிடமிருந்து பெறும் யோசனைகள், காப்புரிமைப் பதிவு செய்வதற்கான உதவி, எண்ணங்கள், வழிமுறைகள், பொருள்கள் ஆகியவற்றுக்கு காப்புரிமை பெறுவதற்கான உதவி, தயாரிப்புக்கான உதவி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தையில் அறிமுகம் செய்வதற்கான உதவி, ஆகியவற்றை இத்திட்டம் வழங்கும்.

***


(रिलीज़ आईडी: 1645154) आगंतुक पटल : 366
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Telugu