விண்வெளித்துறை

வளர்ச்சி நடவடிக்கைகளில் இஸ்ரோ தனது பங்கை வேகமாக விரிவுபடுத்துகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 11 AUG 2020 5:06PM by PIB Chennai

மத்திய மாநில (சுயாதீன பொறுப்பு) வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி (DoNER), மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று மோடி அரசாங்கத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, கடந்த ஆறு ஆண்டுகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) முக்கியமாக செயற்கைக் கோள்களை ஏவுவதில் மட்டுமில்லாமல், அதன் வளர்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து தனது பங்கை விரிவுபடுத்துகிறது, இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவை மாற்றும்" பணிக்குப் பங்களிப்பு செய்கிறது என்று கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001JUXL.jpg

தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களிலிருந்து (Remote sensing satellites) பெறப்படும் தரவை விரிவாகப் பயன்படுத்துவதால், பயிர் நிலையின் ஒப்பீட்டு முன்னேற்றம் மற்றும் வேளாண் துறையில் உற்பத்தித்திறன் அதிகரித்தது. 2019 ஜூலை மாதத்தில் இருந்து, 2020 ஜூலை மாதத்திற்குள் பயிர் நிலையின் ஒப்பீடு முன்னேற்றமும், வேளாண் துறையில் உற்பத்தித்திறன் அதிகரித்ததும் நிரூபிக்கப்பட்ட குறிகாட்டியாக இருக்கும். இயல்பாக்கப்பட்ட வேறுபாடு தாவர அட்டவணை குறியீட்டு எண் (NDVI), இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட சிறந்த பயிர்நிலைகளை தெளிவாகக் காட்டுகிறது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.

டாக்டர். ஜிதேந்திர சிங், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் பேரில், இந்தியத் தலைநகரில் ஒரு விரிவான குழுச்சந்திப்பு நடைபெற்றது, ப்போது, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பிரதிநிதிகள் இஸ்ரோ மற்றும் விண்வெளித் துறையின் விஞ்ஞானிகளுடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் துணை புரிதல், மேம்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துதல் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நவீன கருவியாக சிறந்த விண்வெளித் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கான தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வேளாண்மை, ரயில்வே, சாலைகள் மற்றும் பாலங்கள், மருத்துவ மேலாண்மை / டெலிமெடிசின், சரியான நேரத்தில் பயன்பாட்டுச் சான்றிதழ்கள் பெறுதல், பேரழிவு முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை, வானிலை / மழை / வெள்ள முன்னறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இப்போது விண்வெளித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், உலகின் முன்னணி நாடாக வளர்ந்து வரும் விளிம்பில் உள்ளதாகவும், இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் அதன் அர்ப்பணிப்பு அறிவியல் சகோதரத்துவத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

<><><><><>



(Release ID: 1645149) Visitor Counter : 209