வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திரு. பியூஷ் கோயல் வியாபாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் பொதுமுடக்கத்தின் போது வியாபாரிகள் ஆற்றிய பங்கு குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்

Posted On: 09 AUG 2020 2:29PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு முழுமையாகப் பங்காற்றுமாறு வணிக சமுதாயத்தை மத்திய வர்த்தகத் தொழில்துறை, ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய வணிகர்கள் தினத்தையொட்டி இன்று மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலமாக வணிக சமூகத்தினரிடையே கலந்துரையாடிய அவர், மக்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . மற்ற நட்பற்ற நாடுகளிலிருந்து, தரம் குறைந்த பொருள்களை இறக்குமதி செய்ய மிகுந்த முனைப்போடு இருக்கும் நேர்மையற்ற வியாபாரிகள்/வணிகர்கள் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் வணிகர்கள் செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலமாக வணிக சமுதாயம் மிகுந்த நன்மை அடையும். இந்தியாவிலேயே மிகுந்த தரம் வாய்ந்த பொருள்கள் தயாரிக்கப்படுவதால், உற்பத்தி பெருகி விலைகள் குறைந்து, சர்வதேச சந்தைகளில் போட்டியிடும் வகையில் நமது தயாரிப்புகள் இருக்கும் என்றும் திரு.கோயல் கூறினார் இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும், மக்கள் செழிப்படைவார்கள், வாங்கும் திறன் அதிகரிக்கும். இந்தியாவிலேயே எளிதில் தயாரித்து விடக்கூடிய அகர்பத்தி, விளையாட்டுப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசி சாதனங்கள், டயர்கள் போன்ற இறக்குமதி செய்யப்பட்டு வந்த பல பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது என்று அவர் கூறினார். சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்படும் பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். “உள்ளூருக்கான உரத்த முழக்கம் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறைகூவலை வணிகர்கள் அதிக அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என்று திரு. கோயல் கூறினார்.

 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு வர்த்தகப்பிரிவுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்குவதற்கான குழுக்களை அமைக்குமாறும் வணிகர்ககளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். ரயில்வே துறையும், சரக்குப் போக்குவரத்து ரயில்களை இயக்குவது; உழவன் ரயில் அறிமுகம்; சரக்குப் போக்குவரத்து ரயில்களின் வேகத்தைக் கூட்டுவது; பொருள்களுக்கான கிடங்குகளை மேம்படுத்துவது; ஆகிய பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அலுவலகங்களில் வர்த்தக வளர்ச்சி செல்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் சரக்குகளை எளிதாகவும் குறைந்த விலையிலும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

 

தேசிய மனித நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று திரு.கோயல் உறுதியளித்தார். வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் வணிகர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். பொருள்களை வாங்குவதற்கான GEm என்ற அரசு இணைய தளத்தில் இணைந்து கொள்ளுமாறு வணிகர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

 

 

******(Release ID: 1644707) Visitor Counter : 43