பாதுகாப்பு அமைச்சகம்

சுயசார்பு இந்தியா முயற்சிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேராதரவு


பாதுகாப்புத்துறை பொருள்களின் உள்நாட்டுஉற்பத்தியை அதிகரிப்பதற்காக, பாதுகாப்பு தொடர்பான 101 பொருள்களை இறக்குமதி செய்வதற்கு, கொடுக்கப்பட்ட கால வரையறைக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Posted On: 09 AUG 2020 4:59PM by PIB Chennai

12 மே 2020 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, பொருளாதாரம், கட்டமைப்பு, அமைப்புகள், மக்கள்தொகை, தேவை ஆகிய ஐந்து தூண்களில் அடிப்படையில் சுயசார்பு இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று விடுத்த அறைகூவலைடுத்து சுயசார்பு இந்தியாவுக்கான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தையும் அறிவித்தார். இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ விவகாரங்கள் துறை,101 பொருள்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்து, இந்தப் பட்டியலில் உள்ள பொருள்களைக் குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின்னர் இறக்குமதி செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடைவதற்கான மிகப்பெரிய அடியெடுப்பாக இது அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பொருள்களைத் தயாரிப்பதற்காக ஒரு மிகப்பெரும் வாய்ப்பு, இந்தியப் பாதுகாப்புத் தொழில்துறைக்குக் கிடைத்துள்ளது. தங்களது சொந்த வடிவமைப்புகள், உற்பத்தித்திறன், புதிய தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துதல், பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், ஆகியவை மூலமாக இராணுவப் படைகளின் இனிவரும் ஆண்டுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தொழில்துறை மேற்கொள்ள வேண்டும்

 

ராணுவம், விமானப்படை, கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு, பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள்,ராணுவத் தளவாடங்கள் வாரியம், தனியார் தொழில்துறை உட்பட பல பங்குதாரர்களுடன் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், பல்வேறு கருவிகள், அமைப்புகள் ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க இந்தியத் தொழில்துறையின் தற்போதைய திறன்கள், வருங்காலத் திறன்கள் ஆகியவை பற்றி மதிப்பிடுவதற்காக பல சுற்று ஆலோசனைகள் நடத்திய பிறகு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

 

 

ஏப்ரல் 2015 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்தில் இதுபோன்ற பொருள்களுக்காக சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 260 திட்டங்களுக்கு ராணுவப்படையால் ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. தற்போது 101 பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டு காலத்திற்கு உள்நாட்டுத் தொழில்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களைத் தயாரிப்பதற்கான ஆணைகள் வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் ராணுவத்திற்கும், விமானப் படைக்கும்; ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்ள் கடற்படைக்கும் இதே காலகட்டத்தில் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தடை செய்யப்பட்ட 101 பொருள்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருள்கள் எளிதில் தயாரிக்கக் கூடிய பொருள்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்புச் சேவைக்கான தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய உயர் தொழில்நுட்பம் கொண்ட ஆர்டிலரி துப்பாக்கிகள்,அசால்ட் ரைஃபிள்கள், கார்வெட்டிஸ், சோனார் சிஸ்டம், போக்குவரத்து விமானங்கள், இலகு ரகப் போர் ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் போன்ற பிற உயர் தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களும் அடங்கும். சக்கரக் கவசப்போர் வாகனங்களும் (ஏ எஃப்வி) இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான இறக்குமதிக்கான கடைசி நாள் டிசம்பர் 2021. இதுபோன்ற 200 ஏ எஃப் வி களை சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க ராணுவம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடற்படையும், டிசம்பர் 2021க்கு பிறகு தடைசெய்யப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க உள்ளது. சுமார் 6 கப்பல்கள் 42,000 கோடி ரூபாய் செலவில் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. விமானப்படையைப் பொறுத்தவரை இலகு ரக போர் விமானம் எல் சி ஏ எம் கே 1 ஏ இதற்கு டிசம்பர் 2020 க்குப் பிறகு தடைவிதிக்கப்பட்டுள்ளது இவை 85,000 கோடி ரூபாய் செலவில் 133 வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள 101 பொருட்களில் பல மிக உயர் தொழில்நுட்பம் கொண்ட பொருள்களும் உள்ளன என்பதைக் குறிப்பிடவே இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் தரப்பட்டன.

 

 

இந்தப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான தடை 2020ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இந்தப் பட்டியலை இப்பொழுதே வெளியிடுவதற்கான காரணம் -ராணுவப் படையினரின் வருங்காலத் தேவைகள் குறித்து, இந்தியப் பாதுகாப்புத் தொழில்துறை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உள்நாட்டிலேயே பொருள்களைத் தயாரிப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதேயாகும். பாதுகாப்பு தொடர்பான பொருள்களைத் தயாரிக்கும் தொழில் துறைக்கு எளிதில் வர்த்தகம் மேற்கொள்ள ஊக்கமளிக்கவும், வசதிகள் செய்து தரவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பல முன்னேறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பொருள்ள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து வருகிறது. பாதுகாப்புத் துறை தொடர்பான பொருள்களைத் தயாரிக்கும் தொழில்துறைக்கு ராணுவச் சேவைகள் கரம்பிடித்து வழிநடத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

            

உள்நாட்டிலேயே தயாரிப்பதை அதிகரிப்பதற்காக படிப்படியாக மேலும் சில பொருள்களுக்குத் தடை விதிப்பது குறித்து, பொருள்களை அடையாளம் காண்பதற்காக ராணுவ விவகாரத்துறை, அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் பொருள்களை வாங்குவதற்கான முறைகளிலும் (டிஏபி) இது குறித்து குறிப்பு எழுதப்படும். இந்த தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பொருள்களை, இனிவரும் காலத்தில் இறக்குமதி செய்யக்கூடாது என்பதற்காக டிஏபியில் இவை இடம் பெறும்.

மற்றொரு நடவடிக்கையாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2020-21ஆம் ஆண்டுக்கான மூலதனப் பொருள்களை வாங்குவதற்கான பட்ஜெட்டை, உள்நாட்டு மூலதனப் பொருள்கள், வெளிநாட்டு மூலதன பொருள்கள் வாங்குவதற்கான பட்ஜெட் என்று இரண்டாகப் பிரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மூலதனப் பொருள்கள் வாங்குவதற்காக ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தனி பட்ஜெட் தலைப்பு துவக்கப்பட்டுள்ளது.

 

 

பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், தளங்கள் பொருட்கள் ஆகியவற்றுக்கான தடைவிதிக்கப்பட்ட பட்டியல்

IMPORT EMBARGO LIST OF DEFENCE WEAPONS/PLATFORMS

 

****************



(Release ID: 1644632) Visitor Counter : 425