உள்துறை அமைச்சகம்

வேளாண்மை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாகும், கடந்த ஆறு ஆண்டுகளாக அதை வலுப்படுத்த மோடி அரசு முயற்சித்து வருகிறது

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் என்று நான் நம்புகிறேன் ”


"வேளாண் உள்கட்டமைப்பு நிதி" குளிர்சாதன வசதியுடனான சேமிப்பு, சேகரிப்பு மையங்கள், செயலாக்க மையங்கள் போன்ற பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்குவதை துரிதப்படுத்தும், இதனால் கடின உழைப்பாளிகளான விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கான உண்மையான விலை மதிப்பைப் பெறமுடியும்


"வேளாண் உள்கட்டமைப்பு நிதி" புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும்.


மத்திய உள்துறை அமைச்சர், வேளாண்துறை மற்றும் கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காக ‘1,00,000 கோடி‘ வேளாண் உள்கட்டமைப்பு நிதியம்’ தொடங்குவதற்கும், ‘PM-Kisan’ திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளின் கணக்குகளில், ரூ 17,000 கோடியை மாற்றுவதற்கும் பிரதம மந்திரிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

Posted On: 09 AUG 2020 3:32PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர், 1,00,000 கோடி 'வேளாண் உள்கட்டமைப்பு நிதியம்' ஆரம்பிக்க, ஒப்புதல் அளித்த அமைச்சரவைக்கும், 'PM-Kisan' திட்டத்தின் கீழ் விவசாயத்துறை மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக, 8.5 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு, 17,000 கோடி ரூபாயை மாற்றுவதற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

திரு. அமித்ஷா தொடர்ச்சியான ட்வீட்களில், குளிர்சாதன வசதியுடனான சேமிப்பு, சேகரிப்பு மையங்கள், செயலாக்க மையங்கள் போன்ற பல உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்குவதை வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் துரிதப்படுத்தும், இதனால் நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கான உண்மையான விலை மதிப்பைப் பெற முடியும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

 

மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், "விவசாயமே இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் என்று தெரிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக அதை வலுப்படுத்த மோடி அரசு முயன்று வருகிறது". "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப்ல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று திரு. அமித்ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், “பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜியின் அயராத முயற்சியால், வரும் காலங்களில் இந்திய விவசாயம் உலகத் தரம் வாய்ந்ததாக மாறும் என்று நம்புவதாக கூறினார்.

*****



(Release ID: 1644613) Visitor Counter : 143