சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

விவசாய எந்திரங்களுக்கான தனிவிதமான உமிழ்வு விதிமுறைகள் மற்றும் உமிழ்வு விதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்வதற்கான பொதுமக்களின் ஆலோசனைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரவேற்றுள்ளது

Posted On: 09 AUG 2020 1:35PM by PIB Chennai

சிஎம்விஆர் 1989 விதிமுறைகளில் திருத்தம் செய்யும் உத்தேச வரைவு அறிக்கை குறித்த ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் அது தொடர்பானவர்களிடமிருந்து பின்வரும் வகையில் வரவேற்பதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2020 ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியிட்ட ஜிஎஸ்ஆர் 491 () அறிவிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

 (i) விவசாய எந்திரங்கள் ( விவசாய டிராக்டர்கள், மின்சார டிரில்லர்கள், ஒருங்கிணைந்த அறுவடை எந்திரங்கள்) , கட்டுமான கருவி வாகனங்களுக்கான தனி உமிழ்வு விதிகள்

(ii) பாரத் ஸ்டேஜ் ((CEV/TREM)–IV மற்றும் பாரத் ஸ்டேஜ் ((CEV/TREM)–) –V உமிழ்வு விதிகளின் பெயர் மாற்றம்

a. விவசாய டிராக்டர்கள் மற்றும் இதர உபகரணங்களுக்கான TREM Stage-IV, TREM Stage-V கட்டுமானக் கருவி வாகனங்களுக்கான சிஇவி   ஸ்டேஜ்-IV, ஸ்டேஜ்-V 

 பிஎஸ் விதிமுறைகள் உள்ள மற்ற மோட்டார் வாகனங்களுக்கான உமிழ்வு விதிகளுக்கு இடையே எவ்வித குழப்பத்தையும் தவிர்க்க இது மேற்கொள்ளப்படுகிறது .

iii. டிராக்டர்களுக்கான ( டிஆர்இஎம் ஸ்டேஜ்- IV) அடுத்த கட்ட உமிழ்வு விதிமுறைகளை அமல் படுத்த மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என விவசாய அமைச்சகம், டிராக்டர் தயாரிப்பாளர்கள், விவசாய சங்கங்கள் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்து, 01 அக்டோபர் 2020 என்ற அவகாசம் 01 அக்டோபர் 2021 வரை அவகாசத்தை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஇவி வாகனங்களுக்கான அடுத்த கட்ட உமிழ்வு விதிமுறைகளும் 01 ஏப்ரல் 2021 வரை 6 மாத காலத்துக்கு நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைகளை, இணைச்செயலர் ( எம்விஏ), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், டிரான்ஸ்போர்ட் பவன், நாடாளுமன்ற வீதி, புதுதில்லி -110001 என்ற முகவரிக்கு ( மின்னஞ்சல்; jspb-morth[at]gov[dot]in) அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் அனுப்பலாம்.

 

***



(Release ID: 1644571) Visitor Counter : 155