சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் தொற்று நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மொத்த 14.2 லட்சத்தைக் கடந்தது.


மீட்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இன்று 68.32% ஆக அதிகரித்துள்ளது.



தேசிய அளவில் இறப்பு விகிதம் மேலும் 2.04% ஆக குறைந்துள்ளது

Posted On: 08 AUG 2020 5:02PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களின் கட்டுப்பாடு, பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சையில் கவனம் மற்றும் பயனுள்ள முயற்சிகள் ஆகியவை மீட்பு விகிதங்களை அதிகரிப்பதற்கும், இறப்பு விகிதங்கள் சீராக வீழ்ச்சியடைவதற்கும் காரணமாகின்றன.

பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட பரிசோதனை  ஆகியவை பரவல் தொற்றால் பாதிக்கப்படுவோரை முன்கூட்டியே கண்டறிவதை உறுதிசெய்துள்ளன, இதன் விளைவாக கடுமையான மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது, ​​உலகளாவிய சராசரியான ஒரு மில்லியனுக்கு 2425 ஐ விட 1469 ஆக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்தியா உள்ளது.

 

cases per million.jpg

 

யூனியன் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களால் "பரிசோதித்தல் கண்காணித்தல் சிகிச்சை அளித்தல்" திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுவது, உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதம் (CFR) குறைவாக இருப்பதை உறுதிசெய்தது. மேலும், அது தொடர்ந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இறப்பு விகிதம் இன்று 2.04 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 காரணமா இறப்புகளைக் குறைப்பதற்கான கவனம் செலுத்தும் முயற்சிகளுடன், உலக சராசரியான ஒரு மில்லியனுக்கு 91 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு மிகக் குறைந்த இறப்பு 30 ஆக பதிவாகியுள்ளது.

deaths per million.jpg

கோவிட்-19 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,900 நோயாளிகள் குணமடைந்த நிலையில், இந்தியாவில் கோவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,27,005 ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் விகிதம், சீராக உயர்ந்து, 68.32 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, இன்று 6,19,088 ஆகும், இது தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர்களில் 29.64 சதவீதம் ஆகும். இவர்கள் மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமையில் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மொத்தம் 2,33,87,171 மாதிரிகளை இந்தியா பரிசோதித்ததன் விளைவாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்ட கண்டறியும் ஆய்வக வலையமைப்பு மற்றும் எளிதான சோதனைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,98,778 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு மில்லியனுக்கான பரிசோதனை இன்று 16947 ஆக அதிகரித்துள்ளது.

இந்த பரவலான பரிசோதனையின் முக்கிய காரணி கண்டறியும் ஆய்வகங்களின் தொடர்ச்சியாக விரிவடையும் நெட்வொர்க் ஆகும். இந்தியாவில் அரசுத்துறையில் 936 ஆய்வகங்கள் மற்றும் 460 தனியார் ஆய்வகங்கள் என கோவிட் -19 பரிசோதனைக்கு மொத்தம் 1396 ஆய்வகங்கள் உள்ளன. வை பின்வருமாறு:

  • Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 711 (அரசு: 428 + தனியார்: 283)
  • TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 574 (அரசு: 476 + தனியார்: 98)
  • CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 111 (அரசு: 32 + தனியார்: 79)

கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கும் தவறாமல் பார்வையிடவும்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப வினவல்கள் technicalquery.covid19[at]gov[dot]in மற்றும் பிற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva இல் அனுப்பப்படலாம்.

கோவிட்-19 தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்: + 91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லாது) ஐ தொடர்பு கொள்ளவும். COVID-19 இல் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியலும் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf இல் கிடைக்கிறது.

****


(Release ID: 1644435) Visitor Counter : 209