நிதி அமைச்சகம்

திரு. ஜி.சி.முர்மு , இந்திய சிஏஜியாக பொறுப்பேற்றார்

Posted On: 08 AUG 2020 4:21PM by PIB Chennai

திரு. கிரிஷ் சந்திர முர்மு, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (சிஏஜி) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் குஜராத்தின் இந்திய நிர்வாகப் பணி சேவை ( 1985-ம் ஆண்டு பேட்ஜ்) அதிகாரி ஆவார். இப்பதவியிலிருந்து விலகிய திரு.ராஜீவ் மெக்ரிசியின் இடத்தில் திரு.முர்மு பொறுப்பேற்றார். திரு.முர்மு, இதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற  நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், திரு. முர்முவுக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், பதவியிலிருந்து வெளியேறும் சிஏஜி திரு. ராஜீவ் மெக்ரிசி   உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு  நிகழ்ச்சிக்குப் பின்னர் திரு.முர்மு, சிஏஜி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சிஏஜி அலுவலகத்தில், அவர் மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர் சிலைகளுக்கு மலர் மரியாதை செலுத்தினார்.

 

ஜம்மு காஷ்மீருக்கு செல்வதற்கு முன்பாக, செலவுத்துறையின் முழுநேரச் செயலராக பணியாற்றியதற்கு முன்னர், அத்துறையின் இணைச் செயலராகவும், நிதி சேவைத்துறை மற்றும் வருவாய்த் துறையில் கூடுதல் செயலராகவும், அதன் பின்னர் சிறப்புச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். தில்லியில் பணியாற்றுவதற்கு முன்பாக திரு முர்மு, குஜராத் மாநில அரசில் முக்கியமான பொறுப்புகளை வகித்தார்நிர்வாகம், பொருளாதாரம், உள்கட்டமைப்புத் துறைகளில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது.



(Release ID: 1644420) Visitor Counter : 179