ரெயில்வே அமைச்சகம்

தேவ்லாலி (மகாராஷ்ட்ரா)-யிலிருந்து தனாப்பூருக்கு (பீகார்), சிறப்புப் பார்சல் ரயிலான முதல் ‘’ கிசான் ரயிலை’’ திரு. நரேந்திர சிங் தோமர், திரு. பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்

Posted On: 07 AUG 2020 3:35PM by PIB Chennai

இந்திய ரயில்வே இன்று தேவ்லாலியிலிருந்து தனாப்பூருக்கு முதல்கிசான் ரயிலை’’ அறிமுகப்படுத்தியுள்ளது. தேவ்லாலியில் புறப்பட்ட ரயிலை, காணொளிக் காட்சி மூலம், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைஅமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ரயில்வே இணையமைச்சர் திரு.சுரேஷ் அங்காடி, பஞ்சாயத்து ராஜ், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்  திரு. பர்ஷோத்தம் கொடாபி ரூபலா, விவசாயம் மற்றும் விசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. கைலாஷ் சவுத்ரி, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு. ராவ் சாகிப் பாட்டீல் தன்வே, மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் , மாநில உணவு, சிவில் சப்ளை, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. சாகன் புஜ்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் 10+1 வி.பி பெட்டிகளுடன் வாராந்திர அடிப்படையில் இந்த ரயில் இயங்கும். இந்த ரயில், தனாப்பூரை நாளை மாலை 6.45 மணிக்கு சென்றடையும்.  1519 கி.மீ தூரத்தை 31.45 மணி நேரத்தில் இது கடந்து செல்லும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. நரேந்திர சிங் தோமர், “இன்று விவசாயிகளுக்கு ஒரு சிறந்த நாள். கிசான் ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு  இயன்ற அளவுக்கு விநியோகமும், வருமானமும் தேவைப்படுகிறது. எந்த இயற்கைப் பேரிடரோ அல்லது சவாலோ தங்களைத் தடுத்து விட முடியாது என்பதை இந்திய விவசாயிகள் நிரூபித்துள்ளனர். விவசாய விளைபொருள்கள் நாட்டின் ஒரு மூலையிலிருந்து, இன்னொரு மூலைக்குச் சென்றடைவதை கிசான் ரயில் உறுதி செய்யும். இந்த ரயில், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் பயனளிக்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பியூஷ் கோயல், “இந்திய ரயில்வே, விவசாயிகள் சேவைக்கு ரயில்களை இயக்குகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பின் அடிப்படையில் இந்திய ரயில்வே, கிசான் ரயிலைத் தொடங்கியுள்ளது. இந்த ரயில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் மைல்கல்லாக சேவை புரியும். இந்திய ரயில்வேயும், விவசாயிகளும், கோவிட் சவால்களுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்றனர். உணவு தானியங்கள், சரக்குப் போக்குவரத்து, இந்தக் காலகட்டத்தில் இருமடங்காக உயர்ந்தது. விவசாயிகளின் நலனை இப்போது பாதுகாப்பதைப் போல முன்பு எப்போதும் இருந்ததில்லை. கிசான் ரயில் மூலம், காஷ்மீர் ஆப்பிள்கள் கன்னியாகுமரியை அடையும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறினார்.



(Release ID: 1644129) Visitor Counter : 157