சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஜம்மு , காஷ்மீர், லடாக்கில் ,அமைதி, வளர்ச்சி, முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் உதயம்; தொடர் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் வளர்ச்சியைத் தூண்டும்

Posted On: 07 AUG 2020 1:21PM by PIB Chennai

‘’ஜம்மு , காஷ்மீர், லடாக்கில் அமைதி, வளர்ச்சி, முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் உதயம்; தொடர் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் வளர்ச்சியைத் தூண்டும்’’ என்ற தலைப்பில் , மூத்த பத்திரிகையாளரும், பிராசார் பாரதி வாரியத்தின் உறுப்பினருமான திரு. அசோக் டாண்டன் எழுதிய கட்டுரை வடிவம் வருமாறு:

 

ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு காஷ்மீர் நிரந்தரமாக அல்ல), மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்தப் பிராந்தியம் முழுவதும், உள்ளீடான வளர்ச்சியுடன், வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்ட , அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான புதிய சகாப்தம் உருவாக்கும் உயரிய நோக்கத்துடன், இதற்கான வழிகாட்டுதலை மோடி அரசு வகுத்துள்ளது.

 

மோடி குழு, நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது. இதன் மூலம், பல்வேறு அதிவிரைவு சமூகநலம், வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மூன்று பிராந்தியங்களிலும், சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் விரிவான வளர்ச்சி, சமூகப் பொருளாதார விடுதலையை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, குடிசைத்தொழில், கைவினைத் தொழில், கைத்தறி, தோட்டக்கலைத் தொழில்கள் உள்ளிட்ட குறுசிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

 

அனைத்து தட்ப, வெப்பச் சூழலுக்கு ஏற்ற நல்ல தரமான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், இதுவரை பிராந்தியத்துக்கு உள்ளும், புறமும் இணைப்பு இல்லாமல் இருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பிரிப்புக்குப் பிந்தைய காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இது பெருமளவுக்கு உதவும்.

 

பிராந்திய வாரியாக மேற்கொள்ளப்பட்ட திறன் தணிக்கை, கடந்த ஓராண்டாக நல்ல பலனை ஏற்படுத்தியுள்ளது., வரைபடத்தில் மட்டும் அழகாக இருந்த  இப்பிராந்தியத்தின் நில அமைப்பில் பெரும் மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அனைத்துத் திட்டங்களும் முடிவடையும் போது, கடுமையான மலைப்பகுதிகளில் சுரங்கப்பாதைகளை உள்ளடக்கி, அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள்  பாதுகாப்பு முக்கியத்துவத்தையும் பெற்று விளங்கும்இதனால், தட்ப, வெப்ப நிலையைக் கருதாமல்எல்லாக் காலத்திலும், எவ்வித சிரமும் இன்றி போக்குவரத்து நடைபெறும்., 

 

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்  துணை நிறுவனங்களான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், என்எச்ஐடிசிஎல் ஆகியவை, மாநிலப் பொதுப்பணித் துறையுடன் சேர்ந்து பணிகளை முடிப்பதில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருப்பதுடன்புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு உதவக் கூடியவையாகும்பட்டுப்புழு வளர்த்தல், குளிர் நீர் மின்பிடிப்பு, மர வேலை, கிரிக்கெட் மட்டை தயாரித்தல், குங்குமப்பூ தயாரிப்பு, கைவினைப் பொருள்கள் உற்பத்தி, தோட்டக்கலை உற்பத்தி ஆகியவற்றில் மேலும் வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற சாலைகளுடன், லடாக் முன்னெப்போதும் கண்டிராத உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஊக்குவிப்பைக் கண்டு வருகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், மிகக் கடுமையான மலைப்பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா மேம்பாடு, லடாக்கின் முன்னேற்றத்துக்குப் பெரும் உதவிகரமாக இருக்கும்.

 

தோட்டக்கலைப் பயிர்களுக்கான பாசன வசதி அதிகரிப்பு, பணப் பயிர்களின் உற்பத்தியில் முன்னேற்றம் ஆகியவை விவசாயிகளின் பைகளில் கூடுதல் பணத்தை அளித்து வருகிறது.

 

காஷ்மீர் மற்றும் லடாக்கில், இன்று மகளிர் உரிமைகள், பெண்குழந்தைக் கல்வி ஆகியவற்றில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது’’.

 

*****



(Release ID: 1644102) Visitor Counter : 157