எரிசக்தி அமைச்சகம்

தேசிய அனல் மின் நிலைய நிறுவனக் குழு ஜூலை மாதத்தில் மொத்த உற்பத்தியில் 13.3 சதவீத வளர்ச்சியை எட்டியது.

Posted On: 04 AUG 2020 6:24PM by PIB Chennai

தேசிய அனல் மின் நிலையக் குழுமத்தின் மாதாந்திர மின் உற்பத்தி ஜூலை மாதத்தில் 20.3 சதவீதம் அதிகரித்து 26.73 BU களாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 23.59 BU களுடன் ஒப்பிடும்போது அதிகம்.

 

தேசிய அனல் மின் நிலைய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசிய அனல் மின் நிலைய நிறுவனத்தின் நிலக்கரி நிலையங்கள் ஜூலை 19இல் 20.74 BU உடன் ஒப்பிடும் போது 21.89 BU உடன் ஆண்டுக்காண்டு (YOY) அடிப்படையில் 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சத்தீஸ்கரில் உள்ள தேசிய அனல் மின் நிலைய நிறுவனமான கோர்பா (2600 மெகாவாட்) 2020 ஜூலை மாதத்தில் 100 சதவீத PLF உற்பத்தி செய்துள்ளது.

 

மொத்தம் 62910 மெகாவாட் திறன் கொண்ட, தேசிய அனல் மின் நிலைய நிறுவனக் குழுமத்தில் 24 நிலக்கரி, 7 ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு / திரவ எரிபொருள், 1 ஹைட்ரோ, 13 புதுப்பிக்கத்தக்க பொருள்கள் மற்றும் 25 துணை மற்றும் கூட்டு  (JV) அனல் மின் நிலையங்கள் உள்ளன.

***********



(Release ID: 1643363) Visitor Counter : 279