சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் சிங் படேல் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் மிசோரத்தில் செயல்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.

Posted On: 04 AUG 2020 3:08PM by PIB Chennai

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) திரு. பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசாங்கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் மிசோரம் சுற்றுலா அமைச்சர் திரு. ராபர்ட் ரோமாவியா ராய்ட், கமிஷனர் மற்றும் மிசோரம் அரசு சுற்றுலாத்துறைச் செயலாளர் திருமதி. எஸ்தர் லால்ருவாட்கிமி முன்னிலையில், இன்று புதுடில்லியில் திறந்து வைத்தார்.

புதிய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ் தென்சால் மற்றும் தெற்கு மண்டலத்தில் சுதேஷ் தரிசனம்- வடகிழக்கு சுற்று, மாவட்ட செர்ஷிப் மற்றும் ரெய்க், மிசோரம் ஆகியவற்றின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொகை ரூ 92.25 கோடி, அதில் ரூ 64.48 கோடி தென்சாலில் கோல்ஃப் கோர்ஸ் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
********

 


(Release ID: 1643326) Visitor Counter : 302