பாதுகாப்பு அமைச்சகம்
பொதுமக்கள் குறைகள் தொடர்பாக, கான்பூர் ஐஐடி, பாதுகாப்புத்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை ஆகியவற்றுக்கிடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
04 AUG 2020 1:56PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தொழில் நுட்பப் பயிலகம் (ஐஐடி) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, இன்று கையெழுத்தானது. பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப் பெறப்படும் புகார்களை ஆராயவும், தரவுகளைப் பெறுவதற்குமான, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
-----
(Release ID: 1643304)
Visitor Counter : 293