மத்திய பணியாளர் தேர்வாணையம்
சிவில் சர்வீசஸ்-2019 தேர்வு முடிவுகள்
Posted On:
04 AUG 2020 12:56PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையம், சென்ற 2019 செப்டம்பரில் நடத்திய சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு மற்றும் 2020 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின், பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவர்கள், இந்திய நிர்வாகப் பணி, இந்திய அயலுறவுப் பணி, இந்திய காவல்துறை பணி மற்றும் குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’ மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தம் 829 தேர்வர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை இந்த இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Final_result_english_2019.pdf
இத்தேர்வு முடிவுகள் தொடர்பான விரிவான தகவல்களை மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் காணலாம்.
------
(Release ID: 1643303)
Visitor Counter : 251