அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சார்ஸ்-கோவி-2-வின் முதல் அனைத்திந்திய 1000 மரபணு வரிசைப்படுத்துதல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக டாக்டர். ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு.

Posted On: 01 AUG 2020 4:40PM by PIB Chennai

சார்ஸ்-கோவி-2-வின் முதல் அனைத்திந்திய 1000 மரபணு வரிசைப்படுத்துதல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர், டாக்டர். ஹர்ஷ் வர்தன் இன்று அறிவித்தார். உயிரித் தொழில்நுட்பத் துறையுடன் கூட்டம் ஒன்றை நடத்திய அவர், உயிரித் தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் தொழில்கள் ஆய்வு உதவிக் குழு (BIRAC) மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை - தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் கோவிட்-19 நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

 

கூட்டத்தின் போது, உயிரித் தொழில்நுட்பத் துறையால் குறுகிய காலத்தில் நிறுவப்பட்ட ஐந்து பிரத்யேக கோவிட்-19 உயிரிக் களஞ்சியங்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னலைத் தொடங்கி வைத்த டாக்டர். ஹர்ஷ் வர்தன், அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (THSTI), புவனேஸ்வரில் உள்ள வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ILS), புதுதில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS), புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் மையம் (NCCS) மற்றும் பெங்களூருவில் உள்ள குருத்தணு அறிவியல் மற்றும் மீளுருவாக்க மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றில் இவை அமைந்துள்ளன. "பெருந்தொற்றை ஒழிப்பதற்கான இந்த இடைவிடாத போரில்" உயிரி தொழில்நுட்பத் துறையின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.  

 

 

 https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0049YRM.jpg

 

 

"16 தடுப்பு மருந்துகளின் மாதிரிகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகவும், பிசிஜி தடுப்பு மருந்து, சோதனையின் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும், ஜைடஸ் காடிலா டிஎன்ஏ தடுப்பு மருந்து முதல் கட்டத்தின் இரண்டாவது சோதனையில் இருப்பதாகவும், நான்கு தடுப்பு மருந்துகள் மருத்துவமுறைக்கு முந்தைய ஆய்வில் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகவும்," டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். "ஐந்து சிறந்த மருத்துவமுறை ஆய்வக நடைமுறை (GCLP) பரிசோதனை இடங்கள் உருவாக்கப்பட்டு, ஆறு விலங்கு மாதிரிகளுக்கான தடுப்பு மருந்து உருவாக்கல் ஆய்வுகளும் தயார் நிலையில் உள்ளன," என்று அவர் கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0058UEA.jpg

 

16 தடுப்பு மருந்து மாதிரிகளின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 

* உயிரி தொழில்நுட்பத் துறையின் கோவிட்-19 (தனிநபர் பாதுகாப்பு உபகரணம்) எதிர்வினை குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 

 

***(Release ID: 1642905) Visitor Counter : 250